2 நாள் விழா.. நெருங்கியவர்கள் மட்டும்.. 20ம் தேதி ஆசின் திருமணம்...!
சென்னை: நடிகை அசின் - ராகுல் சர்மா திருமணம் வருகின்ற 20 ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறுகிறது.
2 நாள் விழாவாக நடைபெறும் இந்த நிகழ்வில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைக்க இருவரும் முடிவு செய்திருக்கின்றனர்.
அசின் - ராகுல் இருவரும் தங்களது முதல் திருமண அழைப்பிதழை இந்தி நடிகர் அக்ஷய்குமாரிடம் கொடுத்திருக்கின்றனர்.

அசின் - ராகுல் சர்மா
நடிகை அசின் - ராகுல் சர்மா திருமணம் வருகின்ற 20 ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறுகிறது. அதற்கு முந்தைய தினம் சுமார் 100 க்கும் அதிகமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்குபெறும் மெகந்தி விழா நடைபெறுகிறது. மறுநாள் நடைபெறும் திருமணத்தை இருவரும் பாரம்பரிய முறைப்படி நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்து - கிறிஸ்தவம்
இந்து - கிறிஸ்தவ முறைப்படி 20 ம் தேதி நடைபெறுகின்ற திருமண விழாவில் 250 க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண நிகழ்வை இருவரும் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்கும் உணவில் சைவ உணவுகள் மட்டுமே இடம் பிடித்திருக்கிறதாம்.

மும்பையில் வரவேற்பு
திருமணத்தைத் தொடர்ந்து மும்பையில் வருகின்ற 23 ம் தேதி திருமண வரவேற்பு நடைபெறுகின்றது.இதில் முக்கியமான சில பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்கின்றனர்.
அக்ஷய்குமார்
ராகுல் - அசின் இருவரும் தங்களது முதல் திருமண அழைப்பிதழை இந்தி நடிகர் அக்ஷய்குமாரிடம் கொடுத்திருக்கின்றனர். இதுகுறித்து அக்ஷய்குமார் கூறும்போது "எனது நண்பர்கள் ராகுல் - அசின் திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை பெற்றுக் கொண்டேன். எனது நெருங்கிய நண்பர்களான இருவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தியிருக்கிறார். இவர்கள் இருவரின் காதலுக்கு பாலமாக இருந்தவர் அக்ஷய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











