அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா... வாயடைத்து போன ரசிகர்கள்
சென்னை : 2000 களில் வெளியான பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். கஜினி, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, வேலு, போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்த அசின், 2010 களில் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் பல முன்னணி நடிகர்களுடன், பல ஹிட் படங்களில் நடித்தார். 2015 ல் ஆல் இஸ் வெல் படம் தான் அசின் கடைசியாக நடித்த படம்.

சினிமாவை விட்டு விலகிய அசின்
அதற்கு பிறகு 2016 ல் ராகுல் சர்மா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, முழு நேர குடும்ப தலைவி ஆனார். சினிமாவை விட்டு விலகிய பிறகு அசின், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது ஃபோட்டோக்களை வெளியிட்டு, பழைய நினைவுகளையும், தற்போதைய மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து வந்தார்.

3 வயதில் மகள்
அசினுக்கு 3 வயதில் அரின் ராயன் என்ற பெண் குழந்தை உள்ளார். இவர் தற்போது கதக் நடனம் கற்றுக் கொள்கிறாராம். அசின் பரதநாட்டியம் தெரிந்தவர் என்பதால், அவரது மகளும் வார இறுதி நாட்களில் கதக் கற்றுக் கொண்டு வருகிறாராம்.
Recommended Video

அசின் மகளின் பெயருக்கு அர்த்தம்
இன்ஸ்டாகிராமில் தனது மகளின் ஃபோட்டோக்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் அசின், கடந்த ஆண்டு அவரின் பெயருக்கான காரணத்தையும் பகிர்ந்தார். அரினின் பின்னால் வரும் ராயன் என்ற பெயர், ராகுலின் முதல் எழுத்தையும், அசினின் கடைசி எழுத்தையும் இணைத்து வைக்கப்பட்டதாம்.

அசின் மகளா இது
தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், திருமணத்திற்கு பிறகும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி கிளாமராக காட்சி தரும் அசினுக்கு 3 வயதில் மகள் இருக்கிறார் என்பதும், அவர் கதக் நடனம் கற்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்பதும் தான். இதனை நெட்டிசன்கள் ஆச்சரியமாகப் பார்த்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











