அசினுடன் ஓணம் கொண்டாட அமெரிக்காவில் இருந்து வரும் ராகுல்

By Mayura Akilan

திருவனந்தபுரம்: நடிகை அசினுடன் ஒணம் பண்டிகையைக் கொண்டாட அமெரிக்காவில் இருந்து வர இருக்கிறார் மைக்ரோ மேக்ஸ் நிறுவன அதிபரும் மாப்பிள்ளையுமான ராகுல்.

பொதுவாக திருமணம் முடிந்த பின்னர்தான் தலை தீபாவளியோ, தலை ஓணம் பண்டிகையோ கொண்டாடுவார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்னதாகவே தனக்கு மனைவியாக வரப்போகும் மனைவியுடன் ஓணம் கொண்டாடப்போகிறார் மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை வெள்ளிக்கிழமை கொண்டாட இருக்கிறது. பத்துநாள் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் கேரள மக்கள்.

திரை உலக பிரபலங்கள்

திரை உலக பிரபலங்கள்

வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டும்... வகை வகையாக விருந்து சமைத்து நண்பர்கள் உறவினர்களுடன் உண்டு மகிழ்கின்றனர். திரை உலக பிரபலங்களும் ஓணம் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

அசின் வீட்டில் விருந்து

அசின் வீட்டில் விருந்து

அசின், இந்த ஆண்டு ஓணத்தை, வருங்கால கணவர் ராகுலுடன் இணைந்து கொண்டாட உள்ளார். கேரளாவை தாயகமாகக் கொண்ட அசில் கடந்த சில ஆண்டுகளாவே மும்பையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வந்தார்.

மாப்பிள்ளையுடன் ஓணம்

மாப்பிள்ளையுடன் ஓணம்

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன அதிபர் ராகுலை விரைவில் திருமணம் செய்ய உள்ள அசின், இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை தனது காதலருடன் கொண்டாடப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளா வரும் ராகுல்

கேரளா வரும் ராகுல்

ராகுல், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். நாளை ஓணம் பண்டிகைக் கொண்டாட அமெரிக்காவில் இருந்து கேரளாவிற்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்திற்கு முன்பாகவே தலை ஓணம் கொண்டாட்டங்கள் அசின் வீட்டில் களைகட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X