குட்டி பொண்ணுதான்... ஆனா பெரிய டாஸ்க்... க்யூட் அசினோட க்யூட் ஆரின்
மும்பை : தென்னிந்திய மொழி படங்களின் கனவுக்கன்னியாக இருந்த அசின் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து பின்பு மும்பை தொழிலதிபரை மணந்து கொண்டார்.
கடந்த 2016ல் இவரது திருமணம் நடைபெற்ற நிலையில் 2017ல் ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தது.
தற்போது 3 வயதாகும் ஆரின் இந்த வயதில் மிகப்பெரிய விஷயத்தை செய்து வருவதாக அசின் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அசின்
போக்கிரி, கஜினி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வந்தவர் நடிகை அசின். இதையடுத்து பாலிவுட்டில் கஜினி படம் மூலம் நுழைந்தவர் தொடர்ந்து லண்டன் ட்ரீம்ஸ், ஹவுஸ்புல் 2, கிலாடி 786 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

மிகச்சிறந்த தம்பதி
தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் இருவரும் பாலிவுட்டின் மிகச்சிறந்த தம்பதியாக அறியப்படுகின்றனர். அவருக்கு கடந்த 2017ல் ஆரின் பிறந்தார். திருமணத்தையடுத்து அவர் நடிப்பிலிருந்து ஒதுங்கினார்.

புகைப்படங்கள் பகிர்வு
ஆயினும் சமூக வலைதளங்களில் அவர் பரபரப்புடன் காணப்படுகிறார். அவ்வப்போது அவரது மற்றும் தன்னுடைய மகளுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தின் மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது.

புகைப்படம் பகிர்ந்த அசின்
தற்போது கதக் டான்ஸ் பிராக்டீசில் ஆரின் இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் வாரஇறுதி கதக் பயிற்சி. 3 ஆண்டு என்றும் புகைப்படத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய அம்மாவை போலவே அழகாக காணப்படுகிறார் ஆரின். குட்டி தேவதை.


Click it and Unblock the Notifications











