பில்லா படத்தில் நயனுக்கு பதில் நடிக்க வேண்டியது இவரா?.. வெளியான புகைப்படங்கள் - ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: பில்லா படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் அஜித்குமார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தோல்விகளை கண்ட அஜித்குமார்

தோல்விகளை கண்ட அஜித்குமார்

அமராவதி படம் மூலம் அறிமுகமான அஜித்குமார் ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்தார். ஆசை படம்தான் அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் நடித்த வாலி, காதல் கோட்டை, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் வெற்றியடைய அவருக்கென்று ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். இதற்கிடையே பைக் ரேஸ், கார் ரேஸிலும் ஆர்வம் கொண்டிருந்த அஜித் அதிலும் கவனத்தை செலுத்த சினிமாக்களில் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தார்.

தொடர் தோல்விகளால் துவண்ட அஜித்

தொடர் தோல்விகளால் துவண்ட அஜித்

2000களின் ஆரம்பத்தில் அஜித்தின் சில படங்கள் ஹிட்டானாலும் அந்தக் காலம் அவருக்கு போதாத காலமாகவே இருந்தது. அந்த சமயத்தில் அவர் நடித்த ஜனா, ஜி, ஆஞ்சநேயா, பரமசிவம், திருப்பதி உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் அஜித் ரசிகர்கள் துவண்டு போயினர். அஜித்தும் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்தார்.

அஜித்தை மீட்ட பில்லா

அஜித்தை மீட்ட பில்லா

அப்படிப்பட்ட சமயத்தில்தான் ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி படத்தை விஷ்ணுவர்தன் இயக்க அஜித், நயன்தாரா, நமீதா, ரகுமான் உள்ளிட்டோர் நடித்த அந்தப் படம் முழுக்க முழுக்க மலேசியாவில் ஷூட் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியாகி படம் மாபெரும் வெற்றிபெற்றது. மேலும் ஹாலிவுட் படம்போல் பக்கா ஸ்டைலிஷாக இருக்கிறது எனவும் பாரட்டப்பட்டது. இந்தப் படம்தான் அஜித்தை தோல்வியிலிருந்து முழுமையாக மீட்டது என்றே சொல்லலாம். பில்லாவுக்கு பிறகு அஜித் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

நயன்தாரா கதாபாத்திரத்தில் இவரா?

நயன்தாரா கதாபாத்திரத்தில் இவரா?

பில்லா படத்தின் நயன்தாரா சாஷா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். அந்தக் கதாபாத்திரமும் மிகவும் ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நயன் தாராவும் அதற்கேற்றபடி பக்காவாக நடித்திருப்பார். பல ஆக்‌ஷன் காட்சிகளிலும் கலக்கியிருப்பார். இந்நிலையில் நயன் ஏற்றிருந்த சாஷா கதாபாத்திரத்தில் அசின்தான் முதலில் நடிக்கவிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அசின் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு இது பில்லா படத்துக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோஷுட் என கூறப்படுகிறது. மேலும் கால்ஷீட் பிரச்னையால்தான் பில்லாவில் அசினால் நடிக்க முடியவில்லை எனவும் தகவல் பரவி வருகிறது.

நடிப்பில் கலக்கிய அசின்

நடிப்பில் கலக்கிய அசின்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின் தமிழில் எம்.குமரன் S/0 மகாலெட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் பாலிவுட்டிற்கு சென்றும் கலக்கினார். இப்படி கோலிவுட், பாலிவுட் என பீக்கில் இருந்தபோதே அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X