பாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான் #HBDAsin

By Vignesh Selvaraj

சென்னை : கடவுளின் தேசமான கேரளாவிலிருந்து திரையுலகிற்கு அறிமுகமாகி கோலிவுட், பாலிவுட் எனச் சுற்றிவந்து ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்தவர் நடிகை அசின். இப்போதும் இளமை குறையாத அசினுக்கு இன்று 33-வது பிறந்தநாள்.

தனது குறும்புத்தனமான, யதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக வலம்வந்தார் அசின். தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் தனது க்யூட் & ஸ்வீட் பெர்ஃபார்மன்ஸால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து அம்மாவாக ப்ரொமோட் ஆகியிருக்கிறார். இதுதான் அவருக்கு சிறப்பான பர்த்டே கிஃப்ட்.

சூர்யா ஜோடியாக 'கஜினி', 'வேல்' படங்கள், அஜித்துடன் 'வரலாறு', 'ஆழ்வார் ஆகிய படங்களில் நடித்தவர், விஜய்யோடு 'சிவகாசி', 'போக்கிரி', 'காவலன்' என மூன்று படங்களில் ஜோடி போட்டார். அவர் விஜய்யோடு நடித்த சில பாடல்களைப் பார்த்து, கேட்டு பிறந்தநாளை கொண்டாடலாம்.

அட என்னாத்த சொல்வேணுங்கோ

'சிவகாசி' படத்தில் 'என்னாத்த சொல்வேணுங்கோ... வடுமாங்கா ஊறுதுங்கோ...' என மடிசார் புடவையோடு டப்பாங்குத்து ஆடிய அசினுக்கு தமிழகம் முழுக்க எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முத்தம்

'இங்க... நீ தனியாருக்க... நானும் தனியாருக்கேன். நான் வந்ததும் டக்குனு கட்டிப்பிடிச்சியா... முத்தம் கொடுத்தியா... காத்துப்புகாத அளவுக்கு இறுக்கிக் கட்டிப்பிடிச்சு, நான் போதும் போதும்னு சொல்றவரையும் முத்தம் கொடுத்து ஓய்ஞ்சியா' என விஜய்யிடம் வம்பிழுத்து ரொமான்ஸ் செய்யும் காட்சியில் செம பெர்ஃபாமன்ஸ்.

விசில் அடிக்க

'போக்கிரி' படத்தில் உப்மா ஃபேமிலி அசினுக்கு விஜய் விசில் அடிக்கக் கற்றுத் தரும் காட்சி உலக சினிமா லெவல். விஜய் தனது விரலை அசினின் குவிந்த உதட்டில் வைக்க, அசின் அடிக்கும் விசிலுக்கு தியேட்டரே விசில் அடித்து ரசித்தது.

மாம்பழமாம் மாம்பழம்

'மாம்பழமாம் மாம்பழம்... மல்கோவா மாம்பழம்... சேலத்து மாம்பழம்' என கேரளத்து மாம்பழம் ஆடிய 'போக்கிரி' படத்தின் பாடல் இது.

பட்டாம்பூச்சி

'பட்டாம்பூச்சி கூப்பிடும்போது... பேசக் கூடாதே...' என 'காவலன்' விஜய்யோடு டூயட் ஆடியிருப்பார் ட்ரீம் கேர்ள் அசின். அசினுக்காகவே எழுதப்பட்டதைப் போல, 'பெண் கவிதை இவள்தானே' என ஒரு வரியும் இந்தப் பாடலில் வரும்.

தீபாவளி தீபாவளி

'தீபாவளி தீபாவளி நீதான்டி...' என விஜய் பாட, 'சூறாவளி சூறாவளி நீதான்டா...' என சூறாவளி சரவெடி டான்ஸ் ஆடியிருப்பார்கள் விஜய்யும் அசினும். நடிப்பிலும், டான்ஸிலும் பட்டையைக் கிளப்பிய அசினுக்கு ஹேப்பி பர்த்டே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X