பட்டையை கிளப்பும் அஸ்கு மாரோ வீடியோ பாடல்... 25 மில்லியன் வியூசை தாண்டியிருக்கு
சென்னை : நடிகர் கவின் மற்றும் தேஜூ அஸ்வினி நடிப்பில் தரன்குமார் இசையில் உருவாகியுள்ள பாடல் அஸ்கு மாரோ.
கு கார்த்திக் இந்த பாடலுக்கான வரிகளை எழுதியுள்ள நிலையில் தரன்குமாருடன் ஷிவாங்கி கிருஷ்ணகுமார் பாடலை பாடியுள்ளார்.
மேலும் வீடியோவில் ஷிவாங்கியும் தோன்றுவது பாடலுக்கான மெருகை மேலும் கூட்டியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இந்த பாடல் தற்போது யூடியூபில் புதிய சாதனையை படைத்துள்ளது.

தரன்குமார் இசை
இசை ரசிகர்களின் அதிலும் மாடர்ன் பாடல்களின் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள சமீபத்திய பாடல் அஸ்கு மாரோ. தரன்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை அவருடன் இணைந்து விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி புகழ் ஷிவாங்கி கிருஷ்ணகுமார் பாடியுள்ளார்.

வீடியோவில் ஷிவாங்கி
இரண்டு காதலர்களுக்கு இருவேறு நபர்கள் பின்னாலிருந்து குரல் கொடுப்பது போலவும் இடையிலேயே இருவரது குட்டும் உடைவது போலவும் அமைந்துள்ள இந்த பாடலில் ஷிவாங்கி ஹீரோயினுக்கு குரல் கொடுத்து மாட்டிக் கொள்கிறார். இந்த வீடியோவில் அவரே நடித்துள்ளது பாடலுக்கு மேலும் மெருகை கூட்டியுள்ளது.

அதிகமான பார்வைகள்
இந்த பாடல் டிவியில் ஒளிபரப்பாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது யூடியூபிலும் அதிகமான வியூக்களை பெற்றுள்ளது. தற்போது 25 மில்லியன் வியூக்களை இந்த பாடல் கடந்துள்ளது. இந்த பாடலில் தேஜூ அஸ்வின் மற்றும் கவின் இருவரும் நடித்துள்ளனர்.
சிறப்பான ஹிட்
பாடலில் நடனமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சோனி மியூசிக் சார்பில் உருவாகியுள்ள இந்த பாடலில் இவ்வாறு ஒவ்வொரு விஷயமும் சிறப்பான கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலின் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். தரன்குமார் இசையில் வெளிவந்துள்ள சமீபத்திய பாடல்களில் இந்த பாடலும் ஹிட்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











