நடிகையாக வாய்ப்பு தேடிய இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
மும்பை: நடிகையாக முயற்சி செய்து கொண்டிருந்த இளம் பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோகந்த்வாலா பகுதியில் இருக்கும் கென்ட்வுட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பேர்ல் பஞ்சாபி(22). அவர் இன்று அதிகாலை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

படித்த படிப்பிற்கு வேலை செய்து வந்த பேர்ல் நடிக்கும் ஆசையில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அவருக்கும், அவரின் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுமாம். நேற்று இரவும் பேர்ல் தன் அம்மாவுடன் சண்டை போட்டுள்ளார்.
இதையடுத்து அவர் இரவு 12.30 மணி அளவில் மாடியில் இருந்து குதித்துவிட்டார். உடனே அவரை கோகிலாபென் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஓஷிவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேர்ல் முன்னதாக இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார், ஆனால் சரியான நேரத்தில் அவரை காப்பாற்றிவிட்டனர். இம்முறை அவரை காப்பாற்ற முடியாமல் போனது.
பேர்ல் பற்றி போலீசார் கூறியதாவது,
அந்த பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவரின் உடம்பில் ஆவி இருந்ததாக கூறப்பட்டது. அவர் அடிக்கடி கோபம் அடைவாராம். அவருக்கு கோபம் வந்துவிட்டால் செய்வது அறியாது இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











