சூப்பரான சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்... எல்லாரும் எவ்ளோ கலர்புல்லா இருக்காங்க பாருங்க!

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் அண்ணாத்த.

இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். தீபாவளி ரிலீசாக படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இமான் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சதீஷ், சூரி ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த தீபாவளியையொட்டி ரிலீசான படம் அண்ணாத்த. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தில் கமர்ஷியல் அவதாரம் எடுத்திருந்தார் ரஜினி.

அண்ணன் -தங்கை பாசம்

அண்ணன் -தங்கை பாசம்

இந்தப் படத்தில் அண்ணன் -தங்கை பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. சூப்பர்ஸ்டாரை இந்தப் படத்தில் யூத்புல்லாக காட்டியிருந்தார் சிவா. மேலும் ஒவ்வொரு கேரக்டருக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இமான் இசை

இமான் இசை

இமான் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் கவனம் பெற்றிருந்தன. அண்ணாத்த பாடலை மறைந்த பாடகர் எஸ்பிபி இறுதியாக பாடியிருந்தார். சூப்பர்ஸ்டாரின் டைட்டில் பாடல்களை எப்போதும் அவர்தான் பாடுவார் என்ற நிலையில், இந்தப் பாடலும் கவனம் பெற்றது.

மருதாணி பாடல்

மருதாணி பாடல்

இந்நிலையில் படத்தின் மருதாணி பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 20 மில்லியன் பார்வைகளை கடந்து இந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ள நிலையில் இந்தப் பாடலிலும் ஏராளமான நடிகர்களை வைத்து பாடலை இயக்கியுள்ளார் சிவா.

உதவி நடன இயக்குநர்

உதவி நடன இயக்குநர்

அந்த வகையில் இந்தப் பாடலை இயக்கிய நடன இயக்குநர் பிருந்தா மற்றும் அவரது உதவி நடன இயக்குநர் பிரசன்னா பாபு ஆகியோர் இணைந்து இந்தப் பாடலை இயக்கியுள்ளனர். ரஜினியின் நடன அசைவுகள் மட்டுமின்றி பாடலில் நடித்திருந்த அனைவரும் இந்தப் பாடலில் மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் காணப்பட்டனர்.

சூட்டிங் புகைப்படங்கள் பகிர்வு

சூட்டிங் புகைப்படங்கள் பகிர்வு

இந்நிலையில் இந்தப் பாடலின் சூட்டிங் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி நடன இயக்குநர் பிரசன்னா பாபு பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலில் பணிபுரிந்ததற்காக பிருந்தா மாஸ்டருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் பணிபுரிந்த பாடல்களில் இந்தப் பாடல் மிகவும் சிறப்பானது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கலர்புல் புகைப்படங்கள்

கலர்புல் புகைப்படங்கள்

இந்தப் புகைப்படங்களில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். அனைவரும் கலர்புல்லாக காணப்படுகின்றனர். பிரசன்னா ரஜினி உள்ளிட்டவர்களுக்கு நடன அசைவுகளை பயிற்சி கொடுக்கிறார். அனைவரும் திருமண காட்சியில் நடிப்பதையொட்டி உற்சாக மனநிலையில் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X