தியா திருட்டு கதை - உதவி இயக்குநர் குற்றச்சாட்டு

By Vignesh Selvaraj

Recommended Video

தியா - கரு படம் விமர்சனம் . செல்ஃபி குல்ஃபீ

சென்னை : ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடித்த 'தியா' படத்தின் கதை தன்னுடையது எனவும் அதை எப்படியோ திருடி படமாக எடுத்துவிட்டார்கள் என உதவி இயக்குநர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

'தியா' திரைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த டைட்டில் 'கரு'. கரு எனும் டைட்டிலை வேறு ஒருவர் முன்னரே பதிவு செய்திருந்ததாக சர்ச்சையானதையடுத்து, டைட்டில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Assistant director accuses Vijay for diya movie

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'தியா' திரைப்படம், அழிக்கப்பட்ட கரு ஒன்று தன்னை அழிக்க துணைபுரிந்தவர்களை பழிவாங்குவதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்நிலையில், உதவி இயக்குநர் சந்திரகுமார் 'தியா' படத்தின் கதை தன்னுடையது என குற்றம் சாட்டியுள்ளார். 'கருவிலேயே அழிக்கப்பட்ட ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தனது அழிவுக்குக் காரணமான அனைவரையும் எப்படி பழிவாங்குகிறது என்பதே 2015-ம் ஆண்டு தான் எழுதிய கதை எனக் கூறியுள்ளார் சந்திரகுமார்.

தான் எழுதிய கதையை பலரிடம் கூறியுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தக் கதையில் நடிக்க இயக்குநரும் நடிகருமான ராஜகுமாரன் ஒப்புக்கொண்டாராம். தற்போது தியா படத்தின் விமர்சனங்களைப் படித்து அதிர்ச்சியாகி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால் அப்படியே தனது கதையை எடுத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தான் பலரிடமும் கூறிய கதை எப்படியோ இயக்குநர் விஜய் காதுக்குச் சென்று அதைப் படமாக எடுத்திருக்கக் கூடும். இது எனது கதை என நிரூபிக்க நான் அப்போது போனில் கதை சொன்ன ஆதாரங்கள் இருக்கின்றன. 'தியா' திருட்டுக்கதை எனும் உண்மை அனைவருக்கும் தெரியவேண்டும் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: diya karu தியா கரு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X