படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குநர்: பதிலுக்கு நடிகை செய்தது தான் அல்டிமேட்

By Siva

Recommended Video

Actress Sajitha Madathil: படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குநர் பதிலடி கொடுத்த நடிகை- வீடியோ

திருவனந்தபுரம்: கோலிவுட் உதவி இயக்குநர் ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை சஜிதா மாடத்தில் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் உள்ளது என்று சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகை சஜிதா மாடத்திலும் அதையே தெரிவித்துள்ளார்.

தமிழ் படத்தில் நடிக்க தான் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக கூறுகிறார் சஜிதா.

 தமிழ் படம்

தமிழ் படம்

உதவி இயக்குநர் கார்த்திக் என்பவர் சஜிதாவுக்கு போன் செய்து படம் ஒன்றில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அவரை பற்றிய விபரங்களை கேட்டறிந்துள்ளார் கார்த்திக். இதையடுத்து சஜிதா படம் தொடர்பாக இமெயில் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 அட்ஜஸ்ட்

அட்ஜஸ்ட்

பிற திரையுலகில் இருந்து வாய்ப்புகள் வந்தால் அவை உண்மையா என்பதை உறுதி செய்ய சஜிதா இமெயில் அனுப்பச் சொல்வது வழக்கமாம். அவர் இமெயில் அனுப்புமாறு கூறியதும் அட்ஜஸ்ட் பண்ண தயாரா என்று கார்த்திக் கேட்டுள்ளார். இதை கேட்டு சஜிதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

படுக்கை

படுக்கை

என் வாழ்நாளில் யாரும் என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது இல்லை. நடிகைகளை மட்டும் தான் அட்ஜஸ்ட் பண்ண சொல்வீர்களா இல்லை நடிகர்களையுமா என்று நான் கார்த்திக்கிடம் கேட்டேன் என்கிறார் சஜிதா. படத்தின் பெயர் சரியாக நினைவில் இல்லை என்று சஜிதா கூறியுள்ளார்.

செல்போன் எண்

கார்த்திக்கிற்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பிய சஜிதா அட்ஜஸ்ட் பண்ண தயாராக உள்ளவர்கள் இந்த உதவி இயக்குநரை அணுகலாம் என்று கூறி அவரின் செல்போன் எண்ணை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் கார்த்திக்கின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆஃபில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X