லிங்கா என்னுடைய கதை - மதுரை நீதிமன்றத்தில் வழக்கு
மதுரை: ரஜினி இரு வேடங்களில் நடித்து விரைவில் வெளியாக உள்ள லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரவிரத்னம் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லிங்காவுக்கு கதை எழுதியிருப்பவர் பொன் குமரன். கேஎஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குநராக இருந்தவர். பின்னர் சாருலதா என்ற படத்தை இயக்கினார்.

இவரது கதையைக் கேட்ட பிறகு, அது ரஜினிக்குப் பொருத்தமாக இருந்ததால் லிங்காவாக உருவாக்கினார்கள்.
இந்த நிலையில் படத்தின் கதைக்கு சொந்தம் கோரி ரவிரத்னம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தான் ஒரு துணை இயக்குநர் என்றும், தான் உருவாக்கிய கதைதான் லிங்காவாக படமாகிறது என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
லிங்கா கதை இதுதான் என மீடியாவில் உலா வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











