அடியாட்களை வைத்து மிரட்டும் அறம் இயக்குநர்.. உதவி இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: அறம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இவர் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னதாகவே தமிழ் திரையுலகில் பரபரப்பானவர். அதாவது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி, விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். முடிவில் படத்தில் கதை ஆக்கத்தில் அவரது பெயரும் இடம் பெற்றது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இவரது உதவி இயக்குநர் ராஜ்கமல் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோபி நயினார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதாவது, " நான் கோபி நயினாரிடம் சம்பளம் கேட்டேன் தரவில்லை. திருமணத்திற்குச் செய்கிறேன் என்று கூறினார். திருமணம் திராவிடத் தோழர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பத்திரிகையில் அவரது பெயரைப் போடச் சொன்னார், போட்டோம். இதனால் பலரும் அவரிடத்தில் உங்களது உதவி இயக்குநருக்கு நீங்கள் செய்யவில்லை என்றால் யார் செய்வார்கள் என்று கேட்டதால், அவருக்கு என் மீது கோபம் ஏற்படுகிறது. இதுதான் வன்மாக மாறுகிறது. சம்பளம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். எனக்கு மட்டுமில்லை எனக்கு முன்னால் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனைவருக்குமே இதே நிலைதான்.

குற்றச்சாட்டுகள்: பழவேற்காடு பகுதியில் சுதந்திர இந்தியாவில் மாற்று சமூக மக்களின் ஆதரவோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நான் நட்டினேன். ஆனால் 7 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக உள்ள கோபி நயினார் ஒரு கிராமத்தில் கூட ஒரு கொடியை நட்டியது இல்லை. நான் தலைவரிடமே ( திருமாவளவன்) இவரால் கட்சி வளராது, இவர் கட்சிக்கு வரும் இளைஞர்களையும் வரவேண்டாம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார் என்று முறையிட்டு விட்டேன். அதன் பின்னர் தலைவரும் அவரை அழைத்து பேசியுள்ளார். அதன் பின்னர்தான் அவருக்கு கோபி நயினார் இல்லை கோவ நயினார் என்று கூறி சூடு போட்டார். ஆனால் இவர் திருந்துவதாக இல்லை.
அடியாட்களை வைத்து மிரட்டல்: முக்தார் பேட்டி விஷயத்தைக் கூட தன் மீது எதிர்மறைக் கருத்துக்கள் பரவுகிறது என்று நினைக்காமல், தன்னைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இது எனக்கு பப்ளிசிட்டி தான் என்று கூறியவர். எனது பிரச்னையில் என்ன செய்வது என்றே தெரியாமல் கட்சி உள்ளது. காவல்துறைக்கு சென்றும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால்தான் பத்திரிகையாளர்கள் முன்னால் இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வருகிறோம். இந்த நிலை எனக்கு மட்டுமில்லை, ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் தான். மற்றவர்களுக்கு இங்கு வந்து உட்கார தைரியமில்லை" என்று பேசினார். இவரது இந்த பேட்டி தற்போது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரம் என இரு தளங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் இணையவாசிகள் இயக்குநர் கோபி நயினார் தனது சொந்த வாழ்க்கையில் அறமில்லாதவரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











