விஜய்யுடன் திரிஷா பல வருடங்களாக அப்படி இருக்கிறார்.. அதில் என்ன தவறு?.. விளாசிய பிரபல ஜோதிடர்
சென்னை: தேர்தல் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை தாக்கல் செய்ததோடு மட்டுமின்றி; தனது கணவருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். அவர் அப்படி சொன்ன சில நாட்களிலேயே திரிஷாவும், விஜய்யும் ஜோடி போட்டு ஒரு திருமணத்துக்கு வந்தார்கள். இதையெல்லாம் கடந்து விஜய் முதலமைச்சரும் ஆகிவிட்டார். அவர் முதலமைச்சராக பதவியேற்றதையும் திரிஷா நேரில் வந்து எமோஷனலாக பார்த்தார்.
விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் ஒரு விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அதில், 'தனக்கு விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும். அவரும் ஒரு நடிகையும் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்கள்' என்றும் குண்டை தூக்கிப்போடார். யார் அந்த நடிகை என்று எல்லோரும் தேடலில் ஈடுபட்டிருந்த நிலையில்; விஜய்யும் திரிஷாவும் ஒரே நிறத்தில் உடைகள் அணிந்துகொண்டு தயாரிப்பாளர் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு ஜோடியாக வந்திறங்கினார்கள்.

முதலமைச்சர் விஜய்: சங்கீதா வைத்த குற்றச்சாட்டு, திரிஷாவுடனான கிசுகிசுவெல்லாம் தேர்தலில் விஜய்யை கவிழ்த்துவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அவரது கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வென்றுவிட்டது. விஜய்யும் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதனையடுத்து மற்ற கட்சிகளின் ஆதரவோடு சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் சி.ஜோசப் விஜய்.
எமோஷனலான திரிஷா: அவர் பதவியேற்றபோது அந்த விழாவுக்கு சங்கீதாவோ, மகன், மகளோ வரவில்லை. மாறாக திரிஷாவும், அவரது தாய் ஷோபாவும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு முதல் வரிசையிலேயே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. சி.எம்மாக பதவியேற்றுவிட்டு விஜய் மேடையில் பேசியபோது திரிஷா எமோஷனலாகி கண்கள் கலங்கி அதை கேட்டுக்கொண்டிருந்த வீடியோ ட்ரெண்டானது. மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்துவிட்டார். எனவே அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் திரிஷாவை தவெக களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது பெரும்பாலானோரின் கருத்து.
அடுத்தது என்ன?: விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டாலும்; திரிஷாவுடன் அவருக்கு இருக்கும் உறவு குறித்து இன்னமும் பொதுவெளிக்கு சரியான தெளிவு கிடைக்கவில்லை. இரண்டு பேரும் நண்பர்கள் மட்டும்தானா இல்லை நட்பை தாண்டி வேறு எதுவும் உறவு இருக்கிறதா என்று பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் அதை அமைதியாகவே எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் பிரபல ஜோதிடர் ஷெல்வி இவர்கள் குறித்து பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஷெல்வி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "விஜய் பதவியேற்பு விழாவுக்கு திரிஷா வந்ததில் உங்களுக்கு என்ன பிரச்னை?.. பத்தாயிரம் பேர் வரக்கூடிய ஒரு நிகழ்ச்சி. விஜய்யின் தோழர்கள் அனைவரும் மேடையில் இருந்தார்கள். விஜய்யுடன் திரிஷா அவ்வளவு வருடங்கள் தோழியாக இருக்கிறார். பெர்சனல் ஆயிரம் இருக்கட்டும். தேர்தலுக்கு முன்பு நிறைய பேசினால் பிரச்னை வரும் என்பதால்தான் அப்போது பேசவில்லை. திரிஷா வரக்கூடாது; அவர் வந்ததில் தவறு என்று எப்படி சொல்ல முடியும்? திரிஷாவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கக்கூடாது என்று இவர்கள் யார் சொல்வதற்கு?" என்றார்.


Click it and Unblock the Notifications
