இனி அவர் ஆட்டம் ஆரம்பம்.. விஜயின் ஜாதகம் பற்றி.. பிரபல ஜோதிடர் சொன்ன தகவல்!

சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்து இருக்கும் நிலையில், பிரபல ஜோதிடர் ஷெல்வி, விஜய்யின் "நீச்சமகா ராஜ யோகம்" ஜாதகம் அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும், 'டாக் ஆப் தி இந்தியா'வாக விஜயின் வளர்ச்சி இருக்கும் என்றார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், அடுத்த ஆண்டு மே மாதம் வர உள்ள தேர்தலை சந்திக்க புயல் என புறப்பட்டுள்ளார். காணும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளமாக இவர் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரபல ஜோதிடர் ஷெல்வி ஊடகம் ஒன்றியில் விஜயின் ஜாதகம் பற்றி பேசி உள்ளார்.

Vijay TVK Party Shelvi
Photo Credit:

பிரபல ஜோதிடர் ஷெல்வி: அதில், விஜய்யின் ஜாதகத்தை பற்றி நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். புரட்டாசி மாதத்தில் இருந்து அவருடைய ஆட்டம் ஆரம்பிக்கும். தமிழகத்தில் நான் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறேன். எங்கள் கட்சியில் இருப்பவராக இருந்தாலும் சரி, கூட்டணி கட்சியில் இருப்பவராக இருந்தாலும் சரி, அவரை குறைந்து மதிப்பிட்டால் மிகவும் கஷ்டப்படுவோம். விஜய்க்கும் தமிழகத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுக்கும் தான் நேரடியாக போட்டி ஏற்படும்.

நீச்சமகா ராஜ யோகம் : விஜய்யின் குடும்பத்தினருடனும், விஜய்யுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. விஜய்யுடன் மட்டுமல்லாமல் மற்றவர்களுடனும் தனிப்பட்ட முறையில் கட்சியைத் தாண்டி நான் நல்ல நட்பு வைத்து இருக்கிறேன். நான் அரசியலில் வேறு ஆக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் நட்புடன் பழகி வருகிறேன். விஜய்யின் ஜாதகம் "நீச்சமகா ராஜ யோகம்" என்பது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அவரின் "நீச்சமகா ராஜ யோகம்" சரியான நேரத்தில் வேலை செய்யும். அவரின் ஜாதகம் அவரை தோற்கடிக்காது.

வெற்றி நிச்சயம்: என்னுடைய கருத்துப்படி, வலிமைமிக்க ஜாதகமாக அவருடைய ஜாதகம் இருப்பதால், அவரின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கும். அவருடன் வரும் கூட்டணி கட்சிகள், அவருடன் இருப்பவர்கள் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும். பிரச்சார நேரத்தில் மட்டும் வாகனத்தில் ஏறாமல், சரியான நேரத்தில் களம் இறங்கி தேர்தலை சந்தித்தால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். 2026ல் 'டாக் ஆப் தி இந்தியா'வாக விஜய்யின் வளர்ச்சி இருக்கும் என பிரபல ஜோதிடர் ஷெல்வி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: vijay tvk party விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X