Nayanthara: நயன்தாரா -விக்னேஷ் சிவன் பிரிவா?.. பிரபல ஜோதிடர் கணிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் ஜவான் படம் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இறைவன், அன்னபூரணி என தமிழில் அடுத்தடுத்தப் படங்களில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகின. இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இதனால் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட மாட்டேன் என்ற தன்னுடைய கொள்கையிலிருந்து நயன்தாரா இறங்கி வந்துள்ளார்.

அன்னபூரணி படத்தின் ரிலீசிற்கு பிறகு படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கலைஞர் 100 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். இதேபோல நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என சிறப்பான படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

Astrologer Venu swamy predicts about Nayanthara -Vignesh shivan Divorce

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து இணைந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதேபோல மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நயன்தாரா, சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தார். அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

நயன்தாராவின் அன்னபூரணி படம்: இந்தப் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இறைவன், அன்னபூரணி என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் வெளியான அன்னபூரணி படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியாகி சொதப்பியது. இந்தப் படத்தில் தன்னை நிரூபிக்க போராடும் சமையல் கலை நிபுணராக நடித்திருந்தார் நயன்தாரா. முன்னதாக அவருக்கு படங்கள் கைக்கொடுக்காத நிலையில், அன்னபூரணி படத்தின் ரிலீசுக்கு பின்பு, படத்தின் பிரமோஷன்களிலும் நடிகர் ஜெய்யுடன் இணைந்து ஈடுபட்டிருந்தார். சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன்: நானும் ரவுடிதான் படத்தின்மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனின் அறிமுகம் நயன்தாராவிற்கு கிடைக்க, இருவரும் 7 ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து, திருமணம் செய்துக் கொண்டனர். வாடகை தாய் மூலம் இரு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகினர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அதிகமான சர்ச்சைகளில் நடிகை நயன்தாரா சிக்கி வருகிறார். திருப்பதி கோயிலில் செருப்பணிந்து சென்றது முதல் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலில் செருப்பணிந்து சென்றது வரை அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய அவரது அன்னபூரணி படம் மதஉணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

பிரபல ஜோதிடர் வேணுசாமி கணிப்பு: இந்நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வருங்காலத்தில் பிரிய வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் வேணுசாமி தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் பிரச்சினைகளிலும் சிக்கிவரும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வேணுசாமி கணித்த நிலையில், அதேபோல இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரிய வாய்ப்புள்ளதாக வேணுசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X