விஜயால் தாக்குபிடிக்க முடியாது.. 6 மாதத்தில் மீண்டும் தேர்தல் வரும்.. பிரபல ஜோதிடர்!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4ந் தேதி நடைபெற்றது. இதில், புதிதாக அரசியல் கட்சியை தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களை கைப்பற்றியது. இதனால் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டதால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணைந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது. இதேபோல் சிபிஐ, சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் தலா இரண்டு எம்.எல்.ஏக்களுடன் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். முதலில் கூட்டணி குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று முடிவை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ள நிலையில், அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தையின் முடிவு: விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கொடுத்தால் மட்டுமே விஜயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அதன் பிறகே அவர் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நான்கு மணிக்கு பிறகு முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவால் எல்லாம்: இந்நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழலில், பிரபல ஜோதிடரானா வேணுசுவாமி விஜயின் ஜாதகம் குறித்து கூறியுள்ளார். அதில், விஜயின் ஜாதகம் அமோகமாக இருப்பதாகவும், ஆனால், அவர் திரிஷாவுடன் இணைந்ததால் அவரது ஜாதகத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். திரிஷா இல்லாவிட்டால் தளபதி விஜயின் ஜாதகம் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றார். விஜய்யால் தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறிய அவர், விஜய் முதல்வராக பதவி ஏற்றாலும் ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேர்தல் நடக்கும் என ஜோதிடர் வேணுசாமி கணித்துள்ளார். ஏற்கனவே விஜய் முதல்வராவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஜோதிடர் இவ்வாறு கூறியிருப்பது அவரது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications