நாக சைதன்யா - சோபிதா சேர்ந்து இருக்கமாட்டாங்க.. பெண்ணால் பிரிவார்கள்.. ஜாதகம் அப்படித்தான் இருக்காம்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாகவே ஹெட் லைன்ஸாக இருப்பது நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம்தான். சைதன்யா ஏற்கனவே சமந்தாவை திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்தவர். சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் கடந்த வியாழக்கிழமை சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அவர்களுக்கு பலரும் ஒருபக்கம் தங்களது வாழ்த்தினை கூறிவரும் சூழலில்; ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகேஸ்வர ராவ் குடும்பம். அவருக்கு பிறந்த நாகார்ஜுனாவும் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நாகார்ஜுனா முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்துவிட்டு; நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் நாக சைதன்யா. அவருக்கு டோலிவுட்டில் ஃபேமஸான நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

Naga Chaitanya Samantha

சமந்தாவுடன் திருமணம்: அவர் விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலித்தார். அவர்களது திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் நடந்தது. ஆனால் சில வருடங்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அவர்களது பிரிவுக்கு சமந்தா திருமணத்துக்கு பின்பும் நடித்ததுதான் என்று அரசல் புரசலாக தகவல்கள் ஓடின.

சோபிதாவுடன் நிச்சயதார்த்தம்: இருவரும் பிரிந்த பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்துவருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே அதுகுறித்து வாய் திறக்கவில்லை. அதேசமயம் ஒன்றாக வெளிநாடு சென்ற புகைப்படங்கள் பரவின. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத்தில் சிம்ப்பிளாக நடந்தது. அதனை நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

ஜோதிடர் பேட்டி: அவர்களது நிச்சயதார்த்தத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஃபேமஸாக இருக்கும் ஜோதிடர் வேணு சுவாமி அவர்களது திருமண வாழ்க்கை குறித்து கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய வேணு, "சமந்தா மற்றும் சோபிதாவின் ஜாதகத்தை அலசினால் இரண்டு ஜாதகங்களிலுமே சனியின் கவனம் செவ்வாய் மீதுதான் இருக்கிறது.

சோபிதா ஜாதகம்: சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாயின் கவனம் சுக்கிரன் மற்றும் வியாழன் மீது இருக்கிறது. 2017ஆம் ஆண்டு சோபிதாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் சிக்கல் இருக்கும். அதுவரை நன்றாக இருபார்கள். ஆனால் அதற்கு பிறகு அவர்களது திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா என்பது சந்தேகமே. ஜாதகம் மட்டுமின்றி நிச்சயதார்த்தம் செய்த நேரமும் சரியில்லை. நாக சைதன்யா - சமந்தாவுக்கு 50 மதிப்பெண்ணும், நாக சைதன்யா - சோபிதாவுக்கு பத்து மதிப்பெண்ணையும் தருகிறேன். தொழிலில் இருவருக்கும் நன்றாகத்தான் இருக்கிறது. நாக சைதன்யாவும், சோபிதாவும் சேர்ந்து இருக்க முடியாது என்றுதான் காலம் சொல்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X