Marimuthu: நடிகர் மாரிமுத்து மீது காவல்நிலையத்தில் புகார். எதிர்நீச்சல் சீரியல் நிலை என்னவாகும்?

சென்னை: நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளவர். தற்போது சீரியலிலும் இவர் கலக்கி வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாக்கி வரும் எதிர்நீச்சல் தொடரால் இவருக்கு வரவேற்பா, அல்லது இவரால் சீரியலுக்கு வரவேற்பா என்று பட்டிமன்றமே நடத்திவருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின்மூலம் அதிகமான சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளார் மாரிமுத்து.

Astrologers complaint against Actor Marimuthu in Police station

நடிகர் மாரிமுத்து மீது காவல்நிலையத்தில் ஜோதிடர்கள் புகார்: தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் மாரிமுத்து. தற்போது சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்துவரும் இவருக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. முன்னதாக இயக்குநராகவும் சில படங்களை எடுத்துள்ள இவருக்கு அந்தப் படங்கள் கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படம் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகளை அதிகமாக பெற்றுத் தந்தது. பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்த மாரிமுத்து, சிறப்பான கவனத்தை பெற்று வருகிறார். இதனிடையே இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் இவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது.

இந்தத் தொடரில் நடிப்பதற்காக இவருக்கு மாதம் 75 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கொடுக்கும் காசிற்கு ஏற்ப, இந்த கேரக்டரில் இவர் மிகவும் சிறப்பாக பொருந்தியுள்ளார். இந்த கேரக்டரால் இவருக்கு பெருமையா, அல்லது இவரால் இந்த கேரக்டருக்கு பெருமையா என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக இந்தக் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தத் தொடர், டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று, முன்னணி தொடராக விளங்குவதற்கு இவரது கேரக்டரும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனியார் சேனலில், ஜோதிடர்களுக்கு எதிராக பேசியிருந்தார் மாரிமுத்து. ஜோதிடர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என்றும் நம்நாடு பின்தங்கி இருப்பதற்கு ஜோதிடர்கள்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

Astrologers complaint against Actor Marimuthu in Police station

மேலும் சுனாமி, கொரோனா குறித்தெல்லாம் இவர்கள் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜோதிடர்களின் கண்டனங்களுக்கு உள்ளானார் மாரிமுத்து. இதனிடையே, தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சேத்தூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஜோதிடர், விளக்கம் கேட்டு மாரிமுத்துவிற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து தற்போது மாரிமுத்து மீது 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் திருச்செங்கோடு காவல்நிலையில் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாரிமுத்து மீது நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இந்த புகாரின் மீது மாரிமுத்துவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் எதிர்நீச்சல் தொடருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது சீரியல் குழுவினரிடையே ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X