நூறாவது நாளில் ஆர்ப்பாட்ட 'அசுரன்'... சென்னையில் பிரமாண்ட விழா... தயாராகிறது தாறுமாறு ஏற்பாடு
சென்னை: அசுரன் படம் நூறாவது நாளை எட்டியதை அடுத்து, சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். தனுஷ் வயதான கேரக்டரிலும் இளம் வயது தோற்றத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.
அவர் மனைவியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மற்றும் டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அக்டோபர் மாதம்
இந்தப் படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது.
அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது.

வசூல் ரீதியாக
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், அசுரன் தான்.

100 நாட்கள்
இந்தப் படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படம் இன்று 100 நாட்களை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் ஆர்ப்பாட்டமாக கொண்டாடினர்.

கேக் வெட்டி
சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் தனுஷ் ரசிகர்கள் தியேட்டரில் கேக் வெட்டி, கொண்டாடினர். AsuranBB100Days என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வெற்றிவிழா
இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றிவிழா வரும் திங்கட்கிழமை சென்னையில் நடக்கிறது. ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவில் தனுஷ், வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் படத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











