கைதி படம் சூப்பர்.. அசுரன் விழாவில் தனுஷ் பாராட்டு!

Recommended Video

Asuran 100th Day Celebration | Vetrimaran | Asuran | Dhanush

சென்னை : கைதி படம் பார்தேன் நன்றாக இருந்தது என்று அசுரன் 100 வது நாள் விழாவில் தனுஷ் கூறினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. சில படங்கள் மக்கள் மனதை வென்றது அதில் ஒன்று தான் அசுரன். இப்படத்தின் 100 வது நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

Asuran 100th day ceremony dhanush speech

வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி என்று தான் கூறவேண்டும். இவர் தனுஷ் ஒரு படத்தில் இணைந்ததால் அது வெற்றி தான். இவர்கள் இருவரும் இணைந்து பல தேசிய விருதை தமிழ் சினிமாவிற்கு பெற்றுதந்து உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது அசுரன்.

Asuran 100th day ceremony dhanush speech

இப்படம் தற்போது வரை பல விருதுகளை குவித்து வருகிறது. இப்படத்தின் 100 வது நாள் விழாவில்
நடிகர் தனுஷ் பேசியதாவது. இப்படம் நடித்து முடித்து நான் அடுத்த படத்தின் ஷூட்டிங்காக லண்டன் சென்றேன்.

இப்படத்தின் வெற்றியை என் அம்மா முதன் முதலில் எனக்கு தொலைபேசி மூலம் கூறினார். நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். மேலும் கடந்த வருடத்தின் மற்றுமொரு வெற்றி கைதி படம் குறித்து பேசிய தனுஷ். கைதி படம் பார்தேன் நன்றாக இருந்தது அந்த படத்தில் கார்த்திக் நடிப்பு ரசிக்கும் படி இருந்ததது என்று கூறினார். மேலும் இந்த ஆண்டுடில் அவருக்கு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றவர்கள் படத்தை பார்த்து வாழ்த்து கூறுவார். அவரை போலவே மருமகனும் உள்ளார் என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Asuran 100th day ceremony dhanush speech

இவ்விழாவில் இப்படத்தின் இயக்குனர் வெற்றி மாறன், தயாரிப்பாளர் தாணு மற்றும் அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அசுரன் படக்குழுவினருக்கு கேடயம் கொடுத்து கவுரவிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X