வெற்றிநடை போட்ட ‘அசுரன்‘.. இரத்தம் சொட்டும் 100வது நாள் போஸ்டர் !

சென்னை : தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் 100வது நாளை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழு, ரத்தம் சொட்டும் நூறாவது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் மாறுபட்ட நடிப்பில் உருவான படம் தான் அசுரன். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து தற்போது நூறாவது நாளை எட்டியுள்ளது. இந்த நூறாவது நாளை கொண்டாடும் விதமாக ரோகினி திரையரங்கில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Asuran 100th day of celebration

மேலும் அசுரன் படத்தின் நூறாவது நாள் கொண்டாடும் விதமாக படக்குழு அசுரன் நூறாவது நாள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் சிவப்பு நிறத்தில் போஸ்டரை வடிவமைத்து இருக்கின்றனர். மிக ரௌத்திரமாக ரத்தம் சொட்டும் தனுஷ் படத்தில் சண்டையிடும் காட்சியின் ஒரு போஸை வைத்து இருக்கின்றனர் .

இந்த போஸ்டரை படத்தின் இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்களும் அசுரன் 100வது நாளை வெவ்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர். போஸ்டர் அடிப்பது பேனர் அடிப்பது என்று அவர்களுக்கு பிடித்த ஸ்டைலில் படத்தின் நூறாவது நாளை கொண்டாடி வருகின்றனர் .

Asuran 100th day of celebration

அசுரன் படம் இன்றும் சில திரையரங்குகளில் 100வது நாளில் ஓடி கொண்டு இருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த படம் எது என்றால் அது அசுரனை சொல்லலாம் . 2020 துவங்கிய சில நாட்களிலே மிக முக்கியமான விருது விழாக்களில் சிறந்த படம் , சிறந்த இயக்குனர் ,சிறந்த நடிகர் என்று பல விருதுகளை குவிக்க துவங்கிவிட்டது. மேலும் 2019ற்காக நடத்த படும் பல விழாக்களில் கலந்து பல தலைப்புகளின் கீழ் விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தனுஷ் கலைப்புலி மீண்டும் சேர்ந்து உள்ள அடுத்த படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் மற்றும் லால் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்,படப்படிப்பின் சில புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Asuran 100th day of celebration

இயக்குனர் வெற்றிமாறன் அசுரனின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சூரியை வைத்து 20 முதல் 30 நிமிடம் வரக்கூடிய ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்கி வருகிறார். மேலும் அதற்கடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் இதுவும் அசுரன் படக்குழு போலவே கலைப்புலி தயாரிக்கிறார் ஜீவி இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X