அசுர வேட்டை நடக்குது.. அசுரன் 50ம் நாள் கொண்டாட்டம்!
Recommended Video
சென்னை: வடசென்னை படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் இன்றுடன் 50 நாட்களை கடந்து திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
அசுரன் 50வது நாள் கொண்டாட்டத்தை தனுஷ் ரசிகர்கள், ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அமேசான் பிரைமில் அசுரன் வெளியான பிறகும், சென்னையிலேயே 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அசுரன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
150 கோடி
அசுரன் திரைப்படம், தமிழில் தனுஷுக்கு முதல் 100 கோடி படமாக அமைந்துள்ளது. 12 நாட்களில் 100 கோடி வசூலை அடைந்த அசுரன் படம், 20 நாட்களில் 150 கோடி வசூலை எட்டியது. 50 நாட்கள் ஓடி வரும் நிலையில், சுமார் 160 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
எளியோரின் எழுச்சி
சமீபகாலமாக படங்களில் அரசியல் அதிகமாக தலை தூக்குகிறது. அரசியல் கலந்த படங்கள் தமிழ் சினிமாவில் காலங்காலமாக வெற்றி பெற்றும் உள்ளன. காலில் செருப்பு போட கூட எளியோர்களுக்கு உரிமை இல்லையா என்ற எழுச்சி அரசியல், மற்றும் பஞ்சமி நில விவகாரங்கள், சினிமாவை தாண்டி அரசியலிலும் எதிரொலித்து வருகின்றன.
தேசியவிருது கிடைக்குமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், விசாரணை படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. வடசென்னை படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு தேசிய விருது கூட கிடைக்கவில்லை. மாறாக எதிர்மறையான விமர்சனங்கள் தான் எழுந்தன. இந்நிலையில், இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி ரிலீஸ்
அக்டோபர் 4ம் தேதி அசுரன் படம் வெளியானது. அதற்கடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தன. ஆனாலும், அசுரன் படத்தின் ஓட்டம் குறையாமல், இன்றளவும் ஓடி வருகிறது. அசுரன் படம் 100வது நாள் கொண்டாட்டத்தை காண வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











