அசுரன் பட நடிகைக்கு கொரோனா.. வீட்டில் இருந்தப்படியே மருந்துகளை எடுத்துக்கொள்வதாக அறிவிப்பு!

சென்னை: அசுரன் பட நடிகை அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தி, கன்னடம், தமிழ் என பல மொழிகளை சேர்ந்த சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவால் மரணத்தை சந்தித்து வருகிகின்றன.

அசுரன் நடிகைக்கு கொரோனா

அசுரன் நடிகைக்கு கொரோனா

இதன் காரணமாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் பல படங்களின் படப்பிடிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசுரன் பட நடிகையான அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதி

இதனை அம்மு அபிராமி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது காய்ச்ல் அறிகுறியை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன்.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

முன்னெப்போதையும் விட ஸ்ட்ராங்காய் வருவேன்.. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் அதிக அக்கறையுடன் இருங்கள் வீட்டிலேயே இருங்கள், மாஸ்க் அணியுங்கள், என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை அம்மு அபிராமி.

ராட்சசன் படத்தில்

ராட்சசன் படத்தில்

நடிகை அம்மு அபிராமி அசுரன் படத்தில் இளம் வயது தனுஷுக்கு ஜோடியாக மாரியம்மாள் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதேபோல் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தில் முனிஸ்காந்துக்கு மகளாக நடித்திருப்பார் அம்மு அபிராமி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X