விஜய், அஜித், ரஜினி போல மாஸ்.. வசூலை அள்ளி குவித்த தனுஷ்.. அசுரன் மாபெரும் சாதனை!
அசுரன் படம், தன்னுடைய சினிமா வரலாற்றில் தனுஷுக்கு முக்கியமான படமாக மாறியுள்ளது. அசுரன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: அசுரன் படம், தன்னுடைய சினிமா வரலாற்றில் தனுஷுக்கு முக்கியமான படமாக மாறியுள்ளது. அசுரன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவிலும் இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான படம் ஆகும். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் வெக்கை.
இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார். கதையின் இரண்டாம் பாகத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டது. அது படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அசுரன் படம்
இந்த நிலையில் அசுரன் படம் தற்போது 100 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆம் தனுஷ் நடித்து 100 கோடி வசூலை பெற்ற முதல் படமாக அசுரன் மாறியுள்ளது. வடசென்னை 100 கோடி வசூலை பெறவில்லை. அது 90 கோடி வசூல் வரை மட்டுமே பெற்றது.

செம பாஸ்
ஆனால் வடசென்னை தயாரிப்பாளர் தரப்பிற்கு மிகப்பெரிய லாபம் கொடுத்தது. இப்போது அசுரன் படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளர் தரப்பிற்கு அளித்துள்ளது. படத்தின் பட்ஜெட் 40 கோடிதான் என்ற நிலையில் லாபம் மட்டுமே 100 கோடியை தாண்டி உள்ளது.

தொடக்கம் எப்படி
இந்த படம் முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. தேசிய விருது மட்டுமல்ல ஆஸ்காருக்கும் தகுதியான படம் இது என்று விமர்சனம் வைத்து வருகிறார்கள். இந்த படத்திற்கு பெரிதாக விளம்பரம் கிடையாது.

தூள் இப்போது வரை
இதனால் படம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சரியாக வசூல் பெறவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை விமர்சனத்திற்கு பிறகு படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

தனுஷ்
இதனால் தமிழில் 100 கோடி வசூலை எட்டிய ஹீரோக்களின் லிஸ்டில் தனுஷ் இணைந்துள்ளார். விஜய், அஜித், கமல், ரஜினி, சூர்யா, விக்ரமிற்கு பின் தனுஷ் அந்த இடத்தை பிடித்து இருக்கிறார். படக்குழு , தயாரிப்பாளர் தரப்பு இரண்டும் இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











