பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன்.. வசூலில் மாஸ் காட்டும் அசுரன்.. தனுஷ் - வெற்றி கூட்டணி மீண்டும் சாதனை!
அசுரன் படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: அசுரன் படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அசுரன். இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.
இந்த படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் தற்போது வெளியாகி வருகிறது. நேற்றில் இருந்து நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.

அமெரிக்கா எப்படி
அதேபோல் அமெரிக்காவில் இந்த படம் 50 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது. அங்கு இந்த படம் 87 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. இதனால் அமெரிக்காவில் கொஞ்சம் வசூல் குறைந்துள்ளது.

மொத்தமாக எப்படி
மொத்தமாக இந்த படம் முதல் நாள் 17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. படம் எதிர்பார்த்த அளவிற்கான வசூலைபெறவில்லை. ஆனால் இன்றைய காட்சிகள் எல்லாம் வேகமாக நிரம்பி வருகிறது என்று தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னை
இன்று இந்த படம் 1 கோடிக்கும் மேல் சென்னையில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் கண்டிப்பாக வேகமாக வசூல் செய்து சாதனை படைக்கும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











