அசுரன் நல்லாதான் இருக்கு.. ஆனால் ஒரு சிக்கல்.. இப்படி நடக்கும்னு தெரியாது.. அதிர்ச்சியில் படக்குழு
நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தாலும் படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தாலும் படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் வெக்கை. இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.
இந்த படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் தற்போது வெளியாகி வருகிறது. அதிகாலை காட்சி மற்றும் காலை காட்சி பார்த்தவர்கள் படத்தை புகழ்ந்து வருகின்றனர்.

எப்படி இருக்கிறது
இந்த நிலையில் படம் நன்றாக இருந்தாலும் கூட்டம் கம்மியாக இருக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தியேட்டரில் கூட்டம் இல்லை. புதிய ஹீரோ படம் போல ஆள் குறைவாக இருக்கிறது.

வேண்டும்
இன்று மாலை ஷோவிற்கான டிக்கெட் இன்னும் பெரிதாக புக் ஆகவில்லை. சில தியேட்டர்களில் கூட்டம் கம்மியாக இருக்கிறது என்று அதிகாலை காட்சியை ரத்து செய்துவிட்டனர். ஆகவே எதிர்பார்த்த அளவிற்கு முதல் நாள் வசூல் வராது.

வெளிநாடு
அமெரிக்காவில் பல தியேட்டர்களில் முதல்நாள் காட்சியை ரத்து செய்துவிட்டனர். இதனால் உலக அளவிலான வசூலும் கொஞ்சம் குறையும். இது படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் போக போக படத்தின் வசூல் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எவ்வளவு பணம்
சென்னையில் அசுரன் படம் இன்று 70 லட்சம் ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்ய வாய்ப்புள்ளது. படத்தின் விமர்சனம் நன்றாக வெளியாகி வருகிறது. அதனால் கண்டிப்பாக படம் போக போக வசூலை அள்ளும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications