ப்ப்பா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படின்னா படம் எப்படி இருக்கும்: மிரட்டும் #Asuran
சென்னை: தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படம் அசுரன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் மூலம் தனுஷ், ஜி.வி. பிரகாஷ் இடையே இருந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட்டது. அசுரன் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை இன்று மாலை வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் ஆக்ரோஷமாக மிரட்டியுள்ளார். படம் நிச்சயம் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தனுஷ், மஞ்சு ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











