ட்விட்டரில் டிரெண்டிங்கான அசுரன்...காரணம் என்ன தெரியுமா ?
சென்னை : ட்விட்டர் பொழுதுபோக்கு டிரெண்டிங்கில் இந்திய அளவில் அசுரன் என்ற ஹாஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. 2019 ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் அசுரன்.

சமீபத்தில் இந்த படம் தேசிய விருதினை வென்றது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படம் ரிலீசாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், திடீரென இன்று ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இதற்கு காரணம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து அசுரன் என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஹாஷ்டேக்கில் பலரும் நிதிஷின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நிதிஷ் வீரா, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்து ரிலீசுக்காக காத்திருக்கும் லாபம் படத்திலும் நிதிஷ் நடித்துள்ளார்.
இவரின் திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் நிதிஷின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











