twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அசுரன் நிச்சயம் ஆஸ்கார் விருது வெல்வான் என்கிறார் கலைப்புலி தாணு

    |

    Recommended Video

    Asuran - உயிரை பணயம் வச்சு காட்சிகளை பண்ணாங்க! | Asuran Audio Lanch

    சென்னை: ஆஸ்கார் விருதுக்கு செல்லும் பட்டியலில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் அடுத்த ஆண்டு நிச்சயம் இடம்பெறும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். நடப்பு 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு செல்லும் இந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியான நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு அசுரன் செல்வான் என்று கூறியுள்ளார்.

    ஆண்டு தோறும் தீபாவளி, தைப்பொங்கல் வருவது வோல், ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வும் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழ் திரைப்படங்களுக்கு தான் ஆஸ்கார் விருது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

    நல்ல தரமான படைப்புகள் வெளியாகும் வேளைகளில் மட்டுமே, இந்த திரைப்படம் நிச்சயமாக ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறும் ஏகப்பட்ட பில்டப்களை ஏற்றிவிட்டு, கடைசியில், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மற்ற மொழி திரைப்படங்களை ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இணைத்து விடுவதுண்டு. ஆனால் ஆஸ்கார் விருது ஏற்பாட்டாளர்களோ, அந்த திரைப்படங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாக நடக்கும் வேடிக்கையாகும்.

    அஜித்தின் மாஸை பார்த்து வியந்த விஜய் நடிகை.. 'தல' கோஷத்தால் அதிர்ந்த அரங்கம்.. வைரல் வீடியோ!அஜித்தின் மாஸை பார்த்து வியந்த விஜய் நடிகை.. 'தல' கோஷத்தால் அதிர்ந்த அரங்கம்.. வைரல் வீடியோ!

    ஏ ஆர் ரகுமான்

    ஏ ஆர் ரகுமான்

    ஆஸ்கார் விருதினை வாங்குவதற்கு அனைத்து திரைக்கலைஞர்களும் ஆசைப்படுகின்றனர். இந்தியாவில் தயாரான பிற மொழி திரைப்படங்களுக்கும், அதில் பணியாற்றிய தமிழ் கலைஞர்களுக்கும் கூட ஆஸ்கார் விருதுகள் கிடைத்திருக்கின்றதே ஒழிய நேரடி தமிழ் படத்திற்கு ஆஸ்கார் விருது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஸ்லம் டாக் மில்லினர் என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று தமிழரின் பெருமையை உலகறியச் செய்தார்.

    ஆஸ்கார் விருது விழா

    ஆஸ்கார் விருது விழா

    ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதே சமயத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கு நாடு முழுவதும் மாநில மொழி திரைப்படங்களுக்கும் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது.

    இந்திய திரைப்படங்கள்

    இந்திய திரைப்படங்கள்

    மற்ற நாடுகளின் திரைப்படங்களெல்லாம் எத்தனை ஆஸ்கார் விருது வாங்கும் என்று நினைக்கையில், இந்திய திரைப்படங்கள் என்னவென்றால் அந்த விருதுக்கு செல்லும் பட்டியலில் இடம்பெறவே போட்டி போடவேண்டியுள்ளது வேதனையாக உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் இந்த நிகழ்வு இந்த ஆண்டும் நடைபெற உள்ளது.

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருது

    அதில் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு செல்லும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் வடசென்னை, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகிய தமிழ்ப்படங்களும் பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில் பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் திரைப்படம் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    அசுரனுக்கு ஆஸ்கார்

    அசுரனுக்கு ஆஸ்கார்

    இந்நிலையில் 2020ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் அசுரன் திரைப்படம் இருக்கும் என அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அசுரன் நிச்சயம் ஆஸ்கார் வெல்வானா பார்க்கலாம்.

    English summary
    Producer Kalaipuli S.Thanu has stated on the social media that actor Dhanush's ‘Asuran’ film will be on the list for next year's Oscars.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X