For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசுரன் பிரிப்பவன் அல்ல பிணைப்பவன் தான்-இயக்குநர் பாரதிராஜா

|
ASURAN FDFS PUBLIC REVIEW | DHANUSH | VETRIMARAN | FILMIBEAT TAMIL

சென்னை: அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல. தமிழக மக்களை, நாம் என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அசுரன் திரைப்படத்தை பாராட்டி கடிதம் எழுதியுள்ள பாரதிராஜா, இப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவு கண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான அசுரன் திரைப்படம், கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் உயர் பிரிவினரை குறிப்பிட்டுச் சொல்வதாக வந்த விமர்சனத்தை அடுத்து அந்த காட்சி உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டது.

Asuran movies purpose is not to offend Tamil people-Bharathiraja

இந்நிலையில் இப்படத்தை பாராட்டி இயக்குநர் இமயம் பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் சார்பாக கடிதம் ஒன்றை பத்திரிக்கை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.

என் இனிய தமிழ் மக்களே, தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையின் சார்பாக, உங்கள் பாரதிராஜா.

நமக்குள் சாதி சமய வேற்றுமைகள் இல்லை. இந்தக் கருத்தைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற தற்சார்பு பற்றுகளிலிருந்து (Self regarding sentiments) நீங்கியவர் வெற்றிமாறன். அதனால் தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை, அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி, திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

Asuran movies purpose is not to offend Tamil people-Bharathiraja

ஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர்தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல்காட்டுச் சூறைக்காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும். தங்களது நேரடி அனுபவங்களைக் கதையாகச் சொல்வதால், அப்படியான படங்கள், அசுரனையும் மிஞ்சிய அப்படியான படங்கள், தமிழில் ஓடட்டும். அப்படிப் படங்கள் வரும்போது அந்தப் படங்களை வரவேற்கிற முதல் தமிழனாக, இந்த பாரதிராஜா ஓடோடி வந்து அங்கே நிற்பேன். ஆனால், என்னை முந்திக்கொண்டு வந்து நிற்கிற ஆள் வெற்றிமாறன்.

அதற்கு முன்னர், தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம். இந்தப் படத்தில் வருகிற ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை, உயர் வகுப்பினராகத் தம்மை அறிவித்துக்கொள்கிற குறிப்பிட்ட வகுப்பினரை காயப்படுத்தியிருப்பதாகக் கருத்துகள் வெளிவந்தன. பின்னர், அந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது.

Asuran movies purpose is not to offend Tamil people-Bharathiraja

அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல. தமிழக மக்களை, நாம் என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும். இருந்தபோதிலும், எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, தனது வருத்தத்தைத் தெரிவித்துப் கொள்கிறது.

இப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவு கண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும். அதனாலேயே வெற்றிமாறனின் சார்பாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டது.

Asuran movies purpose is not to offend Tamil people-Bharathiraja

கசப்பை மறந்துவிட்டுப் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடித்த படம் தான் என்று உணர்வீர்கள். ஒரு முறை பார்த்தால் பிறரையும் பார்க்கச் சொல்லி நீங்களே பரிந்துரை செய்வீர்கள்.

எல்லா வித அடையாளங்களையும் உதறுவதுதான் ஒருவனை மானுடன் ஆக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மஹாமனிதாயமாகும் -

கவிஞர் பிரமிள்.

அன்புடன்,

பாரதிராஜா.

English summary
In a letter written by Bharathiraja praising the ‘Asuran’ movie, the purpose of the Asuran is not to offend the Tamil people. It is to promote the people of Tamil Nadu as one.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more