ஜப்பான் விருது விழாவில் ஒளிபரப்பாகும் தனுஷின் அசுரன்.. செம குஷியில் ரசிகர்கள்!
சென்னை: ஜப்பானில் நடைபெறும் விருதுவிழாவில் தனுஷின் அசுரன் படம் ஒளிபரப்பப்படவுள்ளது.
Recommended Video
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இருவரின் நடிப்பும் பெரும் பாராட்டை பெற்றது.

ஒஸாக்கா ஃபிலிம் ஃபெஸ்டிவல்
இந்நிலையில் அசுரன் படம் ஜப்பான் விருது விழாவில் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் நடைபெறவுள்ள ஒஸாக்கா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட அசுரன் படம் தேர்வாகியுள்ளது.

கோல்டன் குளோப்
மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஃபீட்சர் படம் என்ற பிரிவிலும் அசுரன் படம் நாமினேட் ஆகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனரோமா என்ற பிரிவிலும் கோல்டன் குளோப் விருது விழாவிலும் அசுரன் திரைப்படம் திரையிடப்படுவதும் சமீபத்தில் தெரியவந்தது.

ஜிவி பிரகாஷ் இசை
அசுரன் திரைப்படத்தில் பசுபதி, பிரகாஷ் ராஜ், டீஜெய் அருணாச்சலம், அம்மு அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பூமணியின் வெக்கை நாவல்
அசுரன் 'ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பத்தின் பழிவாங்கும் கதையாகவும் மற்றும் சாதி பிளவு, அதிகார அரசியல் போன்றவற்றை மையப்படுத்தியும் எடுக்கப்பட்ட த்ரில்லர் படமாகும். இந்தப் படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











