twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘அசுரன்‘ என்று ஏன் நெகடிவ் தலைப்பு வைத்தீர்கள்… லஷ்மி ராமகிருஷ்ணன் கேள்வி

    |

    சென்னை: அசுரன் என்று ஏன் நெகடிவ்வாக தலைப்பு வைத்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் லஷ்மி ராமகிருஷ்ணன். படத்தில் வரும் வயலன்ஸ் பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது என்றும் இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்

    இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் துணிச்சல் மிகுந்த இயக்குனர்களில் ஒருவர், இவர் கடைசியாக அரசுன் படத்தை இயக்கி இருந்தார் இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தனியார் தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்ட ஒரு கருத்து விவாதத்தில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றி மாறன்
    நெட்ப்ளிக்ஸில் இயக்க போகும் படத்தை பற்றிய தகவலையும் தெரிவித்தார். மேலும் ஆன்தாலஜி படமாக உருவாகும் அந்த படத்தை அரைமணி நேர ஓட்டத்தில் இயக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

    ‘’Asuran’’ negative title?

    அந்த கருத்து விவாத நிகழ்ச்சியில் சக இயக்குனராக லஷ்மி ராமகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அசுரன் படத்தின் தலைப்பு குறித்தும், ஏன் அந்த படத்திற்கு அசுரன் என்று ஏன் நெகடிவ்வாக தலைப்பு வைத்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், தற்போது வரும் படங்களில் இருக்கும் வயலன்ஸ் பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது என்றும் இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இதற்கு பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன், அசுரன் என்பது அசுரர்களை அஃதாவது ராவணர்களை தான் அழைப்பார்கள், பல வருடங்களாக அவர்களை தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். மேலும் அதை உடைத்து தனது கோவத்தை வெளிகாட்டும் தனி மனிதன் ஒருவனின் கதை தான் அசுரன் என்றும் கூறினார் . மேலும் படங்களில் இருக்க கூடிய வயலன்ஸ் அஃதாவது வன்முறைகள் சில சமயங்களில் நமக்கே ஏற்பட கூடியது, அவை தான் சினிமாக்களில் பிரதிப்பலிக்கிறது என்றும் தெரிவித்தார் .

    ‘’Asuran’’ negative title?

    மேலும், பேசிய லஷ்மி ராமகிருஷ்ணன் சினிமாவின் பின்புறங்களில் சாதி ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன அதற்கு தற்போது வெளியாக கூடிய படங்கள் தான் காரணம் என்று கூறினார். இதற்கு பதிலளித்த வெற்றிமாறன் தற்போது பா.இரஞ்சித்தின் படங்கள் பெரிய அளவில் அரசியலையும் அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்துகிறது அது சமுதாயத்திற்கு நல்லதுக்கு தான் என்றும் பதிலளித்தார். மேலும் விவாதத்தின் இறுதியில் பேசிய லஷ்மி ராமகிருஷ்ணன் யாரையும் தனிபட்ட முறையில் தாக்கி படங்கள் எடுக்க கூடாது என்ற கருத்திற்கு இது கண்டிப்பாக நடக்கும் நடக்க வேண்டும் என்றும் வெற்றிமாறன் கூறினார் .

    2019ல் யார் சிறந்த சினிமா இயக்குநர்.. உங்கள் கருத்தை பதிவு செய்ய ஒரு வாய்ப்பு!

    சொல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன், இந்நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியதன் மூலம் பல மீம்ஸ்கள், கிண்டல்கள் என சமூகவலைதளங்களில் இவரை பற்றி செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. என்னதான் மீம்ஸ்கள் வந்தாலும் குடும்ப தலைவிகள் மத்தியில் இவருக்கு அமோக வரவேற்பு உள்ளது. மேலும், குணசித்திர வேடமானாலும் சரி, அம்மா கேரக்டரானாலும் சரி மிகவும் கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்து விட்டார். இவர் நடிப்பதில் மட்டும் அல்ல அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே, ஆரோகனம், ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளனர்.

    English summary
    ‘’Asuran’’ negative title?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X