அசுரன் பட ரீமேக் நரப்பா ... வெளியானது மிரட்டலான ட்ரெயிலர்

ஐதராபாத் : நடிகர் தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் சிறப்பான வெற்றி பெற்ற படம்.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் நரப்பா என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது.

ஓடிடியில் நேரடியாக வரும் 20ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

அசுரன் படம்

அசுரன் படம்

நடிகர் தனுஷ் -வெற்றி மாறன் கூட்டணியில் தமிழில் வெளியான படம் அசுரன். இந்த படத்தில் தனுஷிற்கு மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஜோடியாகியிருந்தார். 80களில் நிகழும் கதைக்களத்தில் 60களையும் தொட்டிருந்தார் இயக்குநர். ஜாதி அதையொட்டிய வன்முறை முதலியவற்றை சிறப்பாக படமாக்கியிருந்தார்.

இரண்டு கெட்டப்புகள்

இரண்டு கெட்டப்புகள்

மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்த இந்த படம் தனுஷ் கேரியரில் சிறப்பான படமாக அமைந்துள்ளது. இளம் வயது மற்றும் முதியவர் என இரண்டு கெட்டப்புகளில் கலக்கியிருந்தார் தனுஷ். இதுபோன்ற கேரக்டர்களில் நடிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல என்பதை மீண்டும் நிரூபித்திருந்தார்.

வெங்கடேஷ் ஹீரோ

வெங்கடேஷ் ஹீரோ

இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி உள்ளிட்டவர்களின் நடிப்பில் ரீமேக் செய்துள்ளனர். ஸ்ரீகாந்த் அடாலா படத்தை இயக்கியுள்ளார். தமிழில் தயாரித்த தாணு தெலுங்கிலும் படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் 20ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மிரட்டலான ட்ரெயிலர்

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில காட்சிகளில் தனுஷை நினைவுப்படுத்தினாலும் வெங்கடேஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் தனுஷ் தன்னை அந்த கேரக்டராகவே வெளிப்படுத்தியிருந்தார். வெங்கடேஷ் அந்த அளவிற்கு ஸ்கோர் செய்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X