அப்போ ‘அசுரன்’ அந்தகாலப் படமா.. 2வது போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை வெறி பிடிக்க வைத்த தனுஷ்!
அசுரன் படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை: அசுரன் படத்தின் இரண்டாம் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் - தனுஷ் வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக சேர்ந்துள்ள படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
முன்னதாக நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், ஆவேசமாக ஈட்டியுடன் தனுஷ் பாய்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதோடு கிராமத்து கெட்டப்பில் தனுஷ் அப்போஸ்டரில் இருந்தார்.
இதனால் இப்படம் நிச்சயம் ஆக்சன் விருந்து படைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த போஸ்டர் நேற்று டிரெண்டிங் ஆனது.
அடுத்த போஸ்டர்:
இந்நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்குவதையொட்டி படக்குழு மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், அந்தகால ஸ்டூடியோ செட்டப்பில் தனுஷும், அவரது மனைவியாக அருகில் மஞ்சு வாரியாரும் நிற்பது போல் உள்ளது. இருவரது உடைகளையும் பார்க்கும் போது, இது நிச்சயம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களமாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.

தனுஷ் கெட்டப்:
அதோடு இந்தப் போஸ்டர் கருப்பு, வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷை விட வயதில் மூத்தவரான மஞ்சு, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாகத் தான் நடிக்கிறார் என்பது இந்த போஸ்டர் மூலம் உறுதியாகி இருக்கிறது.

எதிர்பார்ப்பு:
தங்களது முந்தைய படங்களில் பெரும்பாலும் நிகழ்கால கதைக்களத்தையே தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி கொண்டிருந்தது. இப்படம் அவற்றில் இருந்து வேறுபட்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த இரண்டு போஸ்டர்களும். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எகிறத் தொடங்கிவிட்டது.

வெயிட்டிங்:
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான கிராமத்து தோற்றத்தில் தனுஷ் இப்படத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களைக் காக்க வைக்காமல் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே, படத்தின் பெயரை வெளியிட்டு, பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார் தனுஷ். இதனால் படத்தின் அடுத்த போஸ்டரை இப்போதே ஆர்வமாக எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











