வித்தியாசமான கெட்டப்புடன் அடுத்த ஆட்டத்திற்கு தயாரான தனுஷ்!

தனுஷின் அசுரன் படப்பிடிப்பு தொடங்கியது.

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

வடசென்னை படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அசுரன். இவர்களது கூட்டணியில் இது நான்காவது படமாகும்.

Asuran shoot starts from today

ஏ.ஜி.எஸ். சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். வயதில் மூத்தவரான மஞ்சு வாரியார், தனுஷுடன் நடிப்பதற்கு, முக்கிய காரணம் இருக்கும் என்றே தோன்றுகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி அதற்கான விடையை தந்தது. தனுஷ் இப்படத்தில் கொஞ்சம் வயதான தோற்றத்தில் நடிக்கிறார். அதன் காரணமாகவே இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழில் ஏற்கனவே அறிமுகமான சீனியர் நடிகைகளை நடிக்க வைத்தால், ரசிகர்களுக்கு புதிதாக தெரியாது என்பதால் தான், படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. நடிகர் தனுஷ் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அசுரன் திரைப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படம் என தெரிகிறது. இந்த படத்தை அடுத்து, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை இரண்டாம் பாகம் வெளிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X