Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
அசுரன் ரீமேக்.. தெலுங்கில் நாரப்பா.. பர்ஸ்ட் லுக் ரிலீஸ் !
Recommended Video
சென்னை : அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
வெற்றி மாறன் தனுஷ் இணைந்து பல படங்களில் வேலை செய்து உள்ளனர். வட சென்னை படத்திற்கு பிறகு வெற்றி மாறன் எந்த படத்தை யாரை வைத்து எடுக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது.
வட சென்னை படத்தை முடித்து விட்டு தனுஷ் பல படங்களில் நடிக்க சென்றுவிட்டார். வெற்றி மாறன் தனது அடுத்த கதையை உருவாக்கி கொண்டு இருந்தார். இதன் பின் சில மாதங்கள் கழித்து செய்தி வந்தது தனுஷ் வெற்றி மாறன் உடன் இணைவதாகவும் அதனை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
வெக்கை என்ற நாவலை தழுவி இப்படத்தை எடுத்தார் வெற்றி மாறன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படம் வெற்றிகரமாக நூறாவது நாளை எட்டியது. இப்படத்திற்கு பல மேடைகளில் பல விருதுகள் கிடைத்தன.
ஒரு படம் ஒரு மொழியில் ஹிட் ஆனால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அசுரன் தெலுங்கில் ரீமேக் ஆவதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் வெங்கடேஷ் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனராக ஸ்ரீகாந்த் பணியாற்றுகிறார். இசை அமைப்பாளராக மணி ஷர்மா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.