தமிழில் இருந்து 2 படங்கள் தேர்வு.. கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் அசுரன்!

By

சென்னை: இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தனுஷ் நடித்த அசுரன் உட்பட 2 தமிழ்ப் படங்கள் தேர்வாகி உள்ளன.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.

51 வது பட விழா, நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு மொழி

பல்வேறு மொழி

ஆனால் கொரோனா பரவல் காரணமாக, விழா தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மொழித் திரைப்படங்களுடன் இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும்.

2 தமிழ்ப் படங்கள்

2 தமிழ்ப் படங்கள்

இந்நிலையில், தற்போது இந்தப் பட விழாவில் திரையிட தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன.

தனுஷின் அசுரன்

தனுஷின் அசுரன்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார்.

ரிலீஸ் ஆகவில்லை

ரிலீஸ் ஆகவில்லை

இந்தப் படத்தைத் தொடர்ந்து கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள தேன் என்ற படமும் திரையிடப்பட இருக்கிறது. இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்திய பனோரமாவில், தங்கள் படங்கள் திரையிட தேர்வானதை அடுத்து இரண்டு படங்களின் இயக்குனர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

வெகுஜன திரைப்படப் பிரிவில், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ள சிச்சோரே என்ற படமும், முகமது முஸ்தபா இயக்கத்தில், மலையாளத்தில் வெளியாகி கவனிக்கப்பட்ட கப்பேலா படமும் திரையிடப்படுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X