கண்டிப்பா பார்க்கணும்.. இது 4வது ஹிட்.. சொல்லிவைத்து சம்பவம் செய்த வெற்றி - தனுஷ் கூட்டணி!
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைத்து ஹிட் கொடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைத்து ஹிட் கொடுத்து இருக்கிறார்கள்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்த படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்ட படம் ஆகும். இந்த படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் தற்போது வெளியாகி வருகிறது.

என்ன படம்
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் முதலில் இணைந்த படம் பொல்லாதவன். இந்த படம் தனுஷிற்கு மாஸ் ஹீரோ என்று அடையாளத்தை கொடுத்தது. அதேபோல் வெற்றிமாறனுக்கு மிக பெரிய படமாக பொல்லாதவன் அமைந்தது. இது பிளாக்பஸ்டர் படமாக மாறியது.

ஆடுகளம் எப்படி
அதன்பின்தான் ஆடுகளம் படம் வெளியானது. மதுரையை மையமாக வைத்து உருவான இந்த படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் கொடுத்தது. அதேபோல் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலோடு சேர்த்து தேசிய விருதுகளையும் குவித்தது.

வடசென்னை எப்படி
அதன்பின் வெளியான படம் வடசென்னை. இதில் வெற்றி - தனுஷ் மேஜிக் மீண்டும் வேலை செய்தது. சென்னையை மையமாக வைத்து, டான் ஸ்டோரியாக இந்த படம் உருவானது. இதை திரைக்கதை, ஆக்சன், டோன், திருப்பங்கள், டீடெய்ல் என்று பல விஷ்யங்களுக்காக இந்த படம் பாராட்டப்பட்டது. பல்வேறு அரசியல் காரணங்களால் இந்த படம் தேசிய விருதை பெற முடியவில்லை.

இப்போது
இந்த நிலையில் இதே கூட்டணி இணைந்து தற்போது இன்னொரு ஹிட் கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் முதல் மூன்று படங்களை விட இந்த அசுரன் படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
இதனால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











