கொல நடுங்க வைத்த த்ரில்லர் படம் அஸ்வின்ஸ்.. ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஓடிடியில்!

சென்னை: வசந்த் ரவி நடித்துள்ள அஸ்வின்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதிகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தரமணி, ராக்கி படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் வசந்த் ரவி நடிப்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அஸ்வின்ஸ்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருந்தார். படத்தில் விமலா ராமன், முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Asvins is coming to Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada on 20th July

அஸ்வின்ஸ்: திரில்லர் மற்றும் அமானுஷ்ய படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அதனாலேயே அது தொடர்பான படங்களை புது டெக்னாலஜிகளை கொண்டு வித்தியாசமான முறையில் கொடுக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதை அம்சத்துடன் வெளிவந்திருக்கும் படம் தான் அஸ்வின்ஸ்.

படத்தின் கதை: அறிமுக இயக்குனர் தருண் தேஜா இப்படத்தை இயக்கி இருந்தார். ஐந்து நண்பர்கள் உலகிலேயே அமானுஷ்ய பகுதியாக பார்க்கப்படும் லண்டன் தீவில் இருக்கும் ஒரு மேன்ஷனுக்கு செல்கின்றனர். யூடியூபர்களாக இருக்கும் இவர்கள் அங்கு நடப்பதை வீடியோ எடுத்து அதன் மூலம் ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் முடிவில் இருக்கின்றனர். அதற்காக ஆபத்தான இடத்திற்கு செல்லும் அவர்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்தித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஓடிடியில்: படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிப்பில், விஜய் சித்தார்த்தா இசையமைப்பில், சைக்கலாஜிக்கல் ஹாரர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் வெளியான படம் திரைக்கு வந்து ஒரு மாதமே ஆனநிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அஸ்வின்ஸ் வரும் ஜூலை 20ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X