Asvins Trailer: முதல் Black Tourism ஹாரர் மூவி... திகிலில் உறைய வைக்கும் அஸ்வின்ஸ் ட்ரெய்லர்
சென்னை: வசந்த் ரவி நடித்துள்ள அஸ்வின்ஸ் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் முதன்முறையாக பிளாக் டூரிசம் என்ற திகிலான கதைக்களத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
வசந்த் ரவியுடன் விமலா ராமன் உள்ளிட்ட சிலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனையடுத்து வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் அஸ்வின்ஸ் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

திகிலில் உறைய வைக்கும் அஸ்வின்ஸ் ட்ரெய்லர்:தரமணி திரைப்படம் மூலம் பிரபலமானவர் வசந்த் ரவி. அதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படத்தில் சைக்கோ கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் வசந்த் ரவி, அடுத்து இன்னொரு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கவுள்ளார்.
அதன்படி, தெலுங்கு இயக்குநர் தருண் தேஜாவுடன் கூட்டணி வைத்துள்ள வசந்த் ரவி, 'அஸ்வின்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், சிம்ரன் பரீக் உள்ளிட்ட சிலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள அஸ்வின்ஸ் திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
அதனை முன்னிட்டு இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரலில் அஸ்வின்ஸ் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ட்ரெய்லரும் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 'பிளாக் டூரிசம்' எனப்படும் திகிலான இடங்களுக்கு பயணம் செய்வதை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

வசந்த் ரவி, விமலா ராமன் உட்பட அவரது நண்பர்கள் பிளாக் டூரிசம் செல்ல மர்மங்கள் நிறைந்த ஒரு இடத்தை தேர்வு செய்கின்றனர். அங்கே அவர்களுக்கு வேறொரு உலகமே காத்திருக்கிறது. ஒவ்வொரு நொடியும் பல திருப்பங்களும் திகில் அனுபவங்களும் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. அதனை அஸ்வின்ஸ் படத்தின் ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது.
சைக்கோ திரில்லர் ஜானரில் வெளியான போர் தொழில் படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்து திகில் காட்டியது. அதிலிருந்து மீள முடியாத ரசிகர்களுக்கு அடுத்து ஒரு தரமான திகில் அனுபவத்தை தரவுள்ளது அஸ்வின்ஸ் திரைப்படம். ஹாரர் மூவி ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள இந்தப் படம், ஒட்டுமொத்த சினிமா பிரியர்களுக்கும் சூப்பரான விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











