விஜய் மீண்டும் சினிமாவுக்கு வந்தா நா நிற்பேன்... டிராகன் பட இயக்குநர் கொடுத்த ரியாக்சன்!
சென்னை: நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி மக்கள் பணி செய்ய காத்திருக்கிறார். இதனால், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் கடைசி படம் என அறிவித்து விட்டார். அரசியலில் முழுமையாக களம் காணவுள்ளதால், சினிமாவில் இருந்து மழுமையாக விலக முடிவு செய்துவிட்டார் விஜய். இதனிடையே, டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தால் அவருக்காக நான் நிற்பேன் என மன நெகிழ்வுடன் தெரிவித்தார்.
மாபெரும் வெற்றி: அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இளைஞர்களுக்கு பிடித்த படமாகவும் டிராகன் உள்ளது. SK நடித்த டான் படத்தை போன்று இருப்பதாக விமர்சனங்கள் வந்தபோது அப்படம் வேறு டிராகன் படத்தின் கதை வேறு என பளீச் என அஸ்வத் மாரிமுத்து பதில் அளித்தார்.

விஜய் ரசிகன்: டிராகன் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வத் மாரிமுத்து நான் ஒரு விஜய் ரசிகன் என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அவர் மாதிரி நடனம் யாராலும் ஆட முடியாது என தெரிவித்தார். அவருடன் படம்பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நடந்தால் மகிழ்ச்சிதான் என மனம் திறந்து பேசினார். பின்னர் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.
விஜயின் அரசியல் பயணம்: 2008ஆம் ஆண்டு ரசிகர்களுடன் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தார். 2009ஆம் ஆண்டில் விஜய் மக்கள் இயக்கம் உருவானது. அதேநேரத்தில் புதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவர் சொன்னபடியே கடந்தாண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஏமாற்றம்: விஜய் அரசியலுக்கு வருவது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும், அவரது சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றம் தான். ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் தான் அவரது கடைசிப்படம் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அவர் மற்றொரு படம் நடிப்பார் என்றும் அது தளபதி 70ஆக இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விஜயிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்காக நிற்பேன்: விஜயின் ரசிகர் என தெரிவித்த அஸ்வத் மாரிமுத்து, விஜய் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் அவருக்காக ஒரு பண்ணனும்னு போய் நிற்பேன். அவரை வைத்து ஒரு படம் இயக்கவும் தயாராக உள்ளேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் நடித்த கில்லி திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கில்லி படத்தை ரீமேக் செய்தால் அதில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ரீமேக் செய்வேன் என அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











