இளையராஜாவுக்கு பாராட்டு விழா: அரசு விழாவில்.. முதல் வரிசையில் அமர்ந்திருந்த இன்பநிதி!

சென்னை: 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. பாராட்டு விழாவில் வெளிநாட்டு கலைஞர்களுடன் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இளையராஜா இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 50 ஆண்டு ஆகும் நிலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இதில், நிகழ்ச்சியின் தொடங்கமாக இளையராஜா இசையில் பலரின் மனங்களை கவர்ந்த பாடல் பாடப்பட்டது. இதில் முதலாவது பாடலாக "அமுதே தமிழே அழகிய மொழியே" பாடலை மேடையில் இருக்கும் பாடகர்கள் பாட, இளையராஜா, கமல்ஹாசனுடன் சேர்ந்து இந்த பாடலை பாடினார். இதையடுத்து, பாடகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை பாடி வருகின்றனர். இதில், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், இயக்குநர்கள் மிஷ்கின், ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ilaiyaraaja Udhayanidhi Stalin Inbanithi

முதல்வரிசையில் இன்பநிதி: தமிழக அரசு சார்பில் நடித்தப்படும் இந்த விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா, அவரது மகன் இன்பநிதி ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்து இருக்கின்றனர். இது தற்போது பேசுபொருளாகி, அரசுக்கும் குடும்பத்துக்கும் என்னங்கடா சம்மந்தம் என இணையவாசிகள் கேட்டு வருகின்றனர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு எப்படி உதயநிதி வந்தாரோ, அதே போல உதயநிதி தனது மகன் இன்பநிதியை களமிறங்க உள்ளார். அதற்கான அச்சாரமாகத்தான் இதுபார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நாளை நடைபெற உள்ள இட்லிக்கடை படத்தின் இசைவெளியீட்டு விழா, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையை மட்டும் கொண்டாடும் விழாவாக இல்லாமல், இட்லி கடை படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் இன்பநிதியை அறிமுகம் செய்யும் விழாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இன்பநிதி தனது அப்பா வழியில் விநியோகஸ்தராக தனது கெரியரை தொடங்கியுள்ளார். உதயநிதியின் திரைப்பயணமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழியாக தான் தொடங்கினார். 'குருவி' உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படமாகும். அதைத்தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தராக மாறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X