ஒரு வழியா இவருக்கு பொண்ணு கிடைச்சிடுச்சு போல.. கேம் ஓவர்!
சென்னை: பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் தேடி வந்த நிலையில் பிரபல நடிகருக்கு தற்போது பெண் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தற்போது நாற்பது வயதை கடந்துவிட்டார்.
ஆனாலும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இதனால் நான் சிங்கிள் சிங்கம் என குடியும் கும்மாளமுமாக சுற்றிவந்தார்.

சாபம் விட்ட ரசிகர்கள்
மனைவிகளிடம் அடி வாங்கும் வீடியோக்கள், கணவன்மார்களை நக்கல் செய்யும் டிவிட்டுகள் என போட்டு ஜாலியாக இருந்தார். இதனால் நொந்து போன திருமணமான ரசிகர்கள் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும், சண்டை போடும் மனைவி கிடைக்க வேண்டும் என்றும் சாபம் விடாத குறையாக கூறி வந்தனர்.
கேம் ஓவர்
இந்நிலையில் பிரேம்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் கறுப்பு நிற டீஷர்ட்டில் திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் படம் பதிக்கப்பட்டு கேம் ஓவர் என்று பதிவிடப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு
ஆக நானும் திருமணத்திற்கு தயாராகிவிட்டேன் எனக்கும் பெண் கிடைத்துவிட்டார் என்பதை பிரேம்ஜி மறைமுகமாக கூறியுள்ளார். பிரேம்ஜியின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அட்வைஸ்
பிரேம்ஜியின் அந்த டிவிட்டை 300க்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலரும் பிரேம்ஜியின் டிவிட்டுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.
வராட்டி என்ன?
இனி வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன? என கேட்டு கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
கல்யாணமும் சூசைடும் ஒன்னுதான்
வேண்டாம் ப்ரோ. அனுபவஸ்தன் சொல்றேன். கல்யாணம் பண்றதும் சூசைட் பண்றதும் ஒன்னுதான் என்று அட்வைஸ் செய்துள்ளார் இந்த ரசிகர்.
தனிமரமா ஆயிடுவோம்
பாஸ் கல்யாணம் கில்யாணம் பண்ணிடாதீங்க அப்புறம் உங்கள ரோல்மாடலா எடுத்துக்கிட்டு வாழ்ற நாங்க தனிமரமா ஆகிடுவோம் என்று ஃபீல் பண்ணுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











