'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுன்னு நிரூபிச்சிட்டாரே!' - இது மீம்ஸ்வாலாக்கள்

By Shankar

முதிய பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் ஒருவரை சூர்யா ஓங்கி அறைந்ததாகவும், இதனால் அந்த இளைஞர் மயங்கி விழுந்ததாகவும் நேற்று முதல் பரபரத்துக் கிடக்கிறது கோடம்பாக்கம்.

இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'At last Surya proves his Singam punch dialogue'

இன்றைய இளைஞர்களுக்கு, குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதி முறைகள் பற்றி இம்மியளவு கூட கவலை கிடையாது. ஒரு வாகனத்துக்கு பின்னால் செல்லும்போது, அந்த வாகனத்தை தொட்டபடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது 4 மீட்டர் இடைவெளியிலாவது செல்ல வேண்டும். அப்போதுதான் முன்னால் செல்பவர் திடீரென நிறுத்தினாலும் (சடன் பிரேக்) பின்னால் வருபவர் மோதலைத் தவிக்க முடியும். அந்த குறைந்தபட்ச யோசனை கூட இல்லாமல் செல்வதன் விளைவை அனுபவிக்கட்டும் இந்த இளைஞர்கள் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

'சூர்யா நிஜத்திலும் ஒரு ஹீரோவாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார். தவறு செய்துவிட்டு வீம்புக்கு மல்லுக்கட்டியவர்களை கொஞ்சவா முடியும். ரெண்டு விட்டாதான் புத்தி வரும்' என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

'சிங்கம் படத்தில் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா பாக்குறியா' என்று கர்ஜித்த சூர்யா, நிஜத்திலும் செய்து காட்டிவிட்டார்' என்று இந்த ரணகளத்திலும் குதூகலமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர் இன்னும் சிலர்!

இன்னொரு பக்கம் புகார் கொடுத்துள்ள இளைஞருக்கு ஆதரவாகவும் சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். 'சினிமாவில் ஹீரோவாக சட்டத்தை சூர்யா கையிலெடுக்கலாம். ஆனால் நிஜத்தில் அதை போலீசாரிடம் விட்டிருக்க வேண்டும். என்னதான் இளைஞர்கள் மோசமாக நடந்திருந்தாலும் சூர்யா அடித்திருக்கக் கூடாது," என்கிறார்கள்.

இதற்கிடையில், விபத்துக் காரணமான அந்த கார் பெண்மணி இன்று போலீசாரிடம் சாட்சி கூற வருகிறார். அவர் சொன்ன பிறகுதான் சூர்யா அடித்தாரா இல்லையா என்பது ஊர்ஜிதமாகும்.

More from Filmibeat

Read more about: surya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X