அடுத்த பாகத்தையாவது ஜனரஞ்சகமா எடுங்க..பாடம் எடுத்த சிம்பு, ஐசரி கணேஷ்..அதிர்ச்சியில் கவுதம் மேனன்

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நேரடியாக சிம்பு தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது. சிம்பு உடல் எடையைக்குறைத்து 21 வயது இளைஞர் தோற்றத்துடன் நடித்துள்ளார்.

இந்தப்படம் சிம்புவின் மாநாடு அளவுக்கு பெரிய வெற்றியை பெறும் என எதிர்ப்பார்த்த நிலையில் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் இயக்குநர் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

மாநாடு படத்தின் பெரிய வெற்றி

மாநாடு படத்தின் பெரிய வெற்றி

நடிகர் சிம்பு மிகவும் மெனக்கிட்ட படம் மாநாடு. இந்தப்படத்தில் அவர் திடீரென உடல் எடை மெலிந்து நடித்தார். திரைக்கதையும் ஒரு சிக்கலான டைமிங் மெஷின் கதையாக இருந்தாலும் அதை லாவகமாக கையாண்டிருப்பார் வெங்கட்பிரபு. கூடுதல் பலமாக எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதனால் படம் எதிர்பாராத வெற்றியை பெற்றுத்தந்தது.

பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு

பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு

ஆனால் அதற்கு அடுத்து பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்த படம் வெந்து தணிந்தது காடு. இதற்கு காரணம் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன். இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பதே. இவர்களுடன் சிம்புவும் இணையும் முற்றிலும் வித்தியாசமான கதை என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இயக்குநர் வாசுதேவ மேனன் சிம்பு இதற்கு முன் இரண்டு படங்களில் இணைந்துள்ளனர். இரண்டு படங்களும் நன்றாக ஓடியுள்ளதால் இந்தப்படம் மாநாடு வெற்றியை முறியடிக்கும் என எதிர்பார்த்தனர்.

காதல், ஐபிஎஸ் கதைகள் ஓக்கே கேங்க்ஸ்டர் கதை..ம்ஹூம்

காதல், ஐபிஎஸ் கதைகள் ஓக்கே கேங்க்ஸ்டர் கதை..ம்ஹூம்

கவுதம் வாசுதேவ மேனன் காதலை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளாக ஹீரோக்களை நடிக்க வைத்து கிரைம் சப்ஜக்ட் படம் எடுத்துள்ளார். ஒரு கேங்க்ஸ்டர் மூவி எடுப்பது இதுவே முதன்முறை ஆகும். அவரது முந்தைய கிரைம் கதைகளில் வில்லன்கள் வலுவாக இருப்பார்கள். வெந்து தணிந்தது காடு கேங்க்ஸ்டர் மூவி என்பதால் வலுவான வில்லன் கேரக்டரை எதிர்பார்த்தார்கள். அதுவும் படத்தில் மைனஸ். இதன் எதிரொலி படம் வெற்றி ஆனால் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்கிற மனக்குறை சிம்புவிடமும், தயாரிப்பாளரிடமும் இருந்ததை செய்தியாளர் சந்திப்பில் காண முடிந்தது.

VTK Part 2 இப்படித்தான் வரணும் கோரிக்கை வைத்த சிம்பு

VTK Part 2 இப்படித்தான் வரணும் கோரிக்கை வைத்த சிம்பு

சிம்புவும் கவுதம் வாசுதேவ மேனனும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தாலும் பேசிக்கொண்ட சந்தர்ப்பங்கள் வெகு குறைவு. சிம்பு தனது பேச்சில் கேமரா மேன், டெக்னீஷியன்களை பாராட்டினார். ஆனால் இயக்குநரிடம் வரும்போது நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், "படத்தின் அடுத்த பாகத்தை என்னென்ன வச்சிருக்காங்கன்னு தெரியல கேட்டாத்தான் தெரியும், அது கொஞ்சம் ஜனரஞ்சகமா ரசிகர்கள் கத்தி எஞ்ஜாய் பண்றத்துக்கு கொஞ்சம் விஷயங்களை வைத்தால் நன்றாக இருக்கும், அந்தமாதிரி அவங்கள திருப்தி படுத்துவது போல் ஒரு விஷயம் கொடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார்.

தயாரிப்பாளரும் பார்ட் 2 பற்றி கோரிக்கை

தயாரிப்பாளரும் பார்ட் 2 பற்றி கோரிக்கை

இதையே வலியுறுத்தி பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் தான் பேசும்போது சிம்புவின் நடிப்பை பாராட்டினார். பின்னர் பேசிய அவர் இது கவுதம் மேனன் படம் இல்லை அவர் படம் போல் வந்த வேறு படம், பார்ட் 2 ஜாலியாகவும் ஜனரஞ்சகமாகவும் இருக்கணும்னு கேட்டுகிட்டீங்க பார்ட் ஒன்று இதுமாதிரி பார்த்துட்டோம், பார்ட் 2 வேற மாதிரி இருந்தால் தான் நானே எடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன் என்று கவுதம் மேனனை மேடையில் வைத்துக்கொண்டே சொன்னது முதல் பாகம் எடுத்ததில் கதாநாயகன், தயாரிப்பாளர் இருவருக்கும் திருப்தி இல்லை என்பதை வெளிப்படுத்தியதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X