பிரச்சாரம் செய்வீங்களா? செய்தியாளர் கேட்ட கேள்வி.. கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில், சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு ஒரே ஒரு ரியாக்ஷனை மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
ஜெயிலர் 2: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்லா வசூலை அள்ளியதைத் தொடர்ந்து. தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலகிருஷ்ணா,ஷாருக்கான், மோகன்லால், விஜய் சேதுபதி, சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துவருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கையெடுத்து கும்பிட்ட ரஜினி: இந்நிலையில் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசி ரஜினி, ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தருவாயில் உள்ளது, படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தான் வெளியிடுவார்கள் என்றார். மேலும், கமலுடன் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ரஜினிகாந்த், பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டார். மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு போவீங்களா என்ற கேள்விக்கு 'நோ கமெண்ட்ஸ்' என சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்.


Click it and Unblock the Notifications











