twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா.. கமலே எதிர்பார்க்காத வெற்றி.. சாத்தியமாக்கிய ரசிகர்கள்!

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றது விக்ரம் படம்.

    Recommended Video

    திரையில் இருந்தாலும் தலைவர் தான்! அரசியலுக்கு நான் சம்பாதிக்க வரவில்லை.. ஓபனாக பேசிய கமல்ஹாசன்!

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் வெளியானது விக்ரம்.

    இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள், சிறப்பான திரைக்கதை உள்ளிட்டவை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளன.

    விடாது கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..நொந்து நூடுல்ஸான நெல்சன்.. பாவம் விடுங்கப்பா !விடாது கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..நொந்து நூடுல்ஸான நெல்சன்.. பாவம் விடுங்கப்பா !

    விக்ரம் படம்

    விக்ரம் படம்

    நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன், மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி, காயத்ரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ம் தேதி வெளியான விக்ரம் படம் சிறப்பான காட்சி அமைப்புகள், திரைக்கதை உள்ளிட்டவற்றால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

    10 நாட்களை கடந்து வெற்றிநடை

    10 நாட்களை கடந்து வெற்றிநடை

    திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் சிறப்பான த்ரில் அனுபவத்தை லோகேஷ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதனால் திரையரங்குகளில் ரிப்பீட்டட் ஆடியன்சை பார்க்க முடிகிறது.

    தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    தற்போது இந்தப் படத்திற்கு ஈடு கொடுக்கும்வகையில் மற்ற படங்களும் இல்லாத நிலையில், தனிக்காட்டு ராஜாவாக படம் கம்பீர நடைபோட்டு வருகிறது. இதனிடையே சர்வதேச அளவில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசனின் தலையீடு இல்லாமல் 100 சதவிகித லோகேஷ் படமாக வெளியாகியுள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

    சிறப்பான குட்டி விக்ரம்

    சிறப்பான குட்டி விக்ரம்

    படத்தில் ஒவ்வொரு சிறிய கேரக்டரும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குட்டி விக்ரமாக நடித்துள்ள தர்ஷனும் சிறப்பான எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களிடம் இதையெல்லாம் சரியாக வாங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஒரு பேங்க் ஊழியரிடம் இத்தகைய திறமை இருந்தது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளளது.

    தொடர் வசூல்வேட்டை

    தொடர் வசூல்வேட்டை

    இந்நிலையில் கடந்த 10 நாட்களில் இரண்டு வாரயிறுதிகளை இந்தப் படம் சந்தித்துள்ளது. இதையும் சேர்த்து வசூல்வேட்டை நடத்தியுள்ளது. ஆனால் வாரயிறுதிகளை போலவே வார நாட்களிலும் அதிகமான ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் சேர்த்து உலகளவிலான வசூல் 300 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

    கேரளாவில் வசூல் சாதனை

    கேரளாவில் வசூல் சாதனை

    இந்த ஆண்டில் இதுவரை வசூல்வேட்டை நடத்திய படங்களை பின்னுக்கு தள்ளி விக்ரம் முன்னேறி வருகிறது. தமிழகத்திலும் 130 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது விக்ரம். சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. கேரளாவில் 30 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ளது.

    அமெரிக்க வசூலில் 3வது இடம்

    அமெரிக்க வசூலில் 3வது இடம்

    அமெரிக்காவிலும் கடந்த 10 நாட்களிலும் விக்ரம் படம் 2.5 மில்லியன் டாலர்களை வசூலித்து இந்த ஆண்டில் அங்கு வெளியாகியுள்ள தென்னிந்திய மொழிப் படங்களின் வசூலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப் சாப்டர் 2 படங்கள் உள்ளன.

    கொண்டாட்டத்தில் கமல்

    கொண்டாட்டத்தில் கமல்

    4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ளது விக்ரம் படம். அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்த வெற்றியை அவர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் லோகேஷுக்கு உயர்ரக கார் பரிசளித்தார்.

    English summary
    Kamal's Vikram movie crossed Rs 300 crores in Worldwide collections
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X