கல்கி 2898 AD: பல கோடியில் ப்ரமோஷன்.. புஜ்ஜி ரோபோவை அறிமுகப்படுத்தி பிரபாஸ்!
சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள 'கல்கி 2898 AD' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகள் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது. நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரபாஸ் புஜ்ஜி என்ற புதிய கதாபாத்திரத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
தெலுங்கில் மகாநடி உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கல்கி 2898 ஏடி. இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்கி 2898 AD: தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாக இருப்பதால் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக படக்குழு பலகோடிகளை செலவிட்டு வருகிறது. அண்மையில் ஐ.பி.எல் போட்டியின் போது 12 நொடி விளம்பரத்திற்காக 3 கோடியை செலவு செய்த தயாரிப்பு நிறுவனம். தற்போது இப்படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை கொடுக்கும் வகையில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நேற்று பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது.
புஜ்ஜி ரோபோ: இதில் படத்தின் முன்னணி நடிகர் பிரபாஸும் கலந்து கொண்டு, 'கல்கி 2898 AD' முக்கிய கதாபாத்திரமான புஜ்ஜி ரோபோவை அறிமுகப்படுத்தினார். இதற்காக பிரபாஸ் மேடைக்கு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி வந்தார். அரங்கத்தில் பிரபாசைப் பார்த்த ரசிகர்கள் விசில் அடித்து ஆராவாரம் செய்தனர். இதில் ரோபோ புஜ்ஜி தனது கட்டுமானத்தில் வேகமாக இருக்குமாறு டெவலப்பர்களை தொடர்புபடுத்தி தொந்தரவு செய்யும், புத்திசாலி கதாபாத்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது. புஜ்ஜியின் கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
கமலின் கதாபாத்திரம்: 'கல்கி 2898 AD' படத்தில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள நெமாவார், நர்மதா காட் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவரது கதாபாத்திரம் பற்றிய எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.


Click it and Unblock the Notifications











