மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா அதர்வா!?
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் அதர்வா. இவர் மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன்.
நல்ல நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் உள்ளது.
அடுத்ததாக அதர்வா மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிடப்பில் உள்ளது
அதர்வா தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே படத்த்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் கிடப்பில் உள்ளது. ராஜா மோகன் இயக்கத்தில் அட்ரஸ் படத்திலும் நடித்துள்ளார்.

சிங்கிள் டேக்
இதுமட்டுமின்றி Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தில் அதர்வா - சாம் ஆண்டன் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளது. இந்த படத்தில் ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் வகையில் சிங்கிள் டேக்கில் ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ் சினிமா வட்டாரங்கள் இது குறித்து பரபரப்பாக பேசின.

மலையாள படம்
இந்நிலையில் கடந்த ஆண்டு மலையாள மொழியில் வெளியான அஞ்சாம் பாத்திரா படத்தின் தமிழ் ரீமேக்கில் அதர்வா நடிக்கவுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆறாம் பாத்திரா என்ற தலைப்பில் தயாராகி வருகிறது.

கொடூரமான கொலைகள்
கொடூரமான முறையில் தொடர்ந்து கொலைகள் செய்யும் சீரியல் கில்லரின் கதையே அஞ்சாம் பாத்திரா. இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் ரீமேக் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











